Wednesday, 9 November 2011

பிரபஞ்ச ரகசியம்

எந்த கடவுளை எந்த காரியத்திற்கு வணங்குவது ?
(நன்றியுடன் livingextra.com)

கடவுள் ஒருவனே , என்கிறது பிற மதங்கள். ஆனால், இந்து மதத்தில் மட்டும் எதற்கு இத்தனை கடவுள்கள் , என்கிற கேள்வி நம் எல்லோர் மனத்திலும் நிகழும். மும் மூர்த்திகள் என்று கருதப்படுபவர்கள் கூட , ஒரு யோக நிலையில் இருப்பது போல நாம் எத்தனை படங்களில் பார்த்து இருக்கிறோம். அவர் யாரை எண்ணி தவம் செய்கிறார். மும்மூர்த்திகளுடன் . சதாசிவம், ருத்ரன், என்று - ஐந்து மூர்த்திகள் இருக்கின்றனராம்.
உலக பரம்பொருள் என்று சர்வ வல்லமை பொருந்திய அந்த கடவுள் ஒன்று தான். அவரைத்தான் சிவனும் , யோக நிலையில் தியானிக்கிறான். அந்த ஆதி சிவன் ஒருவனே. மீதி நாம் வணங்கும் அனைவரும், தேவதைகள் , தெய்வங்கள் - அவதாரங்கள் , ஒரு சில காரண , காரியத்துக்காக அந்த பரம்பொருள் அனுப்பியவர்கள் என்கின்றனர் பெரியோர்கள். சித்தர்களுக்கு மேல் இருக்கும் உயர்ந்த நிலை , இந்த தெய்வங்கள்.
முருகனும், விநாயகரும் கூட - சித்தர்கள் போன்று வாழ்க்கை நடத்தி, பின் சிவனின் மைந்தனானவர்கள் என்கின்றனர். பலப்பல யுகங்கள் கடந்து , நாமும் இறைநிலை அடைய விருக்கிறோம். அதை இன்றிலிருந்தே தொடங்குவது , நமக்கு இன்னும் நல்லது.
 
எப்படி இறைவனுக்கும் சில கடமைகள் விதிக்கப்பட்டு இருக்கின்றனவோ, அதே போல மனிதர்களுக்கும் சில கடமைகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஒரு பெரிய தொழிற்சாலை இருப்பதாக எடுத்துக்கொள்வோம். நாமெல்லாம் தொழிலாளர்கள். நம்மை சூப்பர்வைஸ் செய்ய - நவ கிரகங்கள். நவ கிரகங்கள் - பக்காவாக நம்மை கண்காணித்து , நம்மை வேலை வாங்குகின்றன. பஞ்ச பூதங்களை - ரா மெட்டீரியலாக கொண்டு , பஞ்ச பூத கலவையாலான அந்த உடலைக் கொண்டு இந்த பிரபஞ்ச தொழிற்சாலை இயங்குகிறது.

இந்த சூபர்வைசர்களுக்கு மேலே மேலாளர்கள். அவர்களுக்கும் மேலே - பொது மேலாளர்கள் . அவர்களையும் இயக்குவது இயக்குனர்கள். அந்த இயக்குனர்களுக்கும் மேலே - சேர்மன் என்கிற முதலாளி.

செய்யும் வேலை , திறமை , அவர்கள் செய்து முடிக்கும் திறன் , என்று ஒவ்வொருவரின் உழைப்பும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. உழைக்க வேண்டும். அதாவது , வாழ வேண்டும் - வாழ்ந்து அவரவர் கடமையை செய்ய வேண்டும். இப்படியே , ஒவ்வொருவருக்கும் அடுத்தடுத்த நிலை தீர்மானிக்கப் படுகிறது. ஒரு செக்சனிலிருந்து , மற்றொரு பிரிவுக்கு அவர் மாற்றப்படுவர். நல்ல திறமையுடன், நல்லவராக இருந்தவருக்கு - அடுத்த பிரிவு , கொஞ்சம் மேன்மையானது

இந்த அப்ரைசல் தான் - மரணம் , அடுத்த பிறவி. நீங்கள் திரும்ப உழைப்பதற்கு வசதியாக , திரும்ப இளமை கிடைக்கிறது. மோசமான வேலை செய்தவர்களுக்கு - கடினமான செக்க்ஷனும் கிடைக்கும்.
நீங்களே ஒண்டியா, தனித்தனியே வேலை செய்ய முடியாததால் - உங்களுடன் இணைந்து செயலாற்ற உங்கள் குடும்பம் , நண்பர்கள் , சமுதாயம் என்று ஒரு குழுவே இருக்கிறது.

குடும்பத்தில் யாரோ ஒருவர் , ஓவராக ஆட்டம் போட்டாலும், திடு திப் பென்று ( அகால மரணம்) டிபார்ட்மென்ட் மாற்றமும் நிகழும். இதனால் , அவரும் பாதிக்கப் படுகிறார். அந்த குடும்பமும் வேலைப் பளுவால் முழி பிதுங்கும்.

இவை அத்தனையும் சமாளித்து , நரை மூப்பெய்தி - என்னை கூட்டிக்கோப்பா என்று , நீங்கள் எழுப்பும் ஒரு மன ஓலம் , உங்களுக்கு அடுத்த கதவை திறக்க வைக்கும்.


நீங்கள் கதவு திறந்து , அடுத்த அறைக்கு வந்ததும், அதே சூப்பர்வைசர்கள். அவர்களுக்கு தெரியும், நம்மோட அருகதை. இதில், பாரபட்சம் பார்க்காது - நமக்கு கிடைக்க வேண்டிய கூலியை , அவர்கள் மேலிடத்திலிருந்து நமக்கு கிடைக்க செய்கின்றனர்.

ஒரு ப்ரோமோஷன் கொடுக்கும் முன், உங்கள் சகல திறமையும் பரிசோதிப்பது போல - உங்களுக்கு பலப்பல கஷ்டங்கள், சோதனைகள் வைக்கப்படுகின்றன. இதிலும் தாக்குப் பிடித்து , உங்கள் அணியிலுள்ள சக தொழிலாளர்களையும் அரவணைத்து , உங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை செய்து முடிக்க வேண்டும்.

உங்கள் அணியிலும், சமூகத்திலும் , ஒருவர் மனம் கூட கோணாது , அவர்களுக்கும் ஒத்தாசை செய்து , ஒரு குழுவாக கூடி - உங்கள் கடமையை செய்து முடிக்கவேண்டும். அவர்களை பகைத்துக் கொண்டால், சமயத்தில் சொதப்பிவிடுவார்களே.


உங்களை நீங்கள் , உங்கள் ஆன்ம ஒளியை உணர்ந்து கொள்ளுதல் தான் - முதல் படி. உங்கள் பலம் என்ன வென்று அதன் பிறகுதானே உணர முடியும்? ஹனுமனை போல நீங்களும் கடலை தாண்ட முடியும். மலையையும் தூக்க முடியும்.

உலகம் ஒரு நாடக மேடைதான். அந்த இறைவன் இயக்குகிறான். திறமையாக , நடித்தால் - நீங்களும் ஒரு நாள் ஹீரோ வைக்கலாம். இல்லையெனில், சாதாரண துணை நடிகர் தான். ஒரு நாடகம் முடிந்ததும் , அடுத்த நாடகம் ஆரம்பிக்கும். அப்போது ஹீரோவும், இரண்டாம் நிலைக்கு தள்ளப்படலாம், தனது பொறுப்பை உணர்ந்து ஜொலிக்காவிடில்.

..நமது பிறப்பின் நோக்கம் என்ன, நாம் எந்த இலக்கை நோக்கிப் பயணிக்கிறோம் என்பது மிக முக்கியம்.


இப்போது நாம் எங்கு இருக்கிறோம் ? நமக்கு ஏன் இத்தனை தெய்வங்கள் என்று புரிகிறதா? எப்படி சூரியனிலிருந்து - தெறித்து வந்த , உஷ்ணத் துளிதான் பூமி என்று விஞ்ஞானம் நிரூபித்ததோ, அதைப் போல ஏராளமான சூரியன்களும் இருப்பது உண்மையோ, அந்த பிரபஞ்சத்திற்கும் மூலப் பொருள் ஒன்று இருக்கும். அந்த மூலத்திலிருந்து வெளியான , துகள்களின் , அணுக்களில் , அணுக்களில் உள்ள அணுதான் , நாம் அனைவரும்.

என்னில் உள்ள அந்த ஜீவ ஒளி தான் , உங்களிலும் உள்ளது. நம் அனைத்து உயிர்களிலும் உள்ளது. இயற்கையிலும் உள்ளது.

எனவே , ஜாதி மத . இன துவேஷத்தை மறப்போம். சக மனிதர்களை நேசிப்போம். இயற்கையை ஆராதிப்போம். நம் வாழ்வாதாரத்தை வணங்குவோம். குழந்தைகளையும், திறமை இல்லாதவர்களையும், வழி நடத்துவோம். நாம் அனைவரும் கடவுளாவோம்.

அடி மனத்தில் பரவும் எண்ணம், எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் மறையாது. முதலில் நம் மனம் முழுவதும் நல் எண்ணங்களால் நிறையட்டும்.

பிற உயிர்களுக்கு தீங்கு விளைவிக்க வேண்டாம். பிற உயிர்களை கொன்று புசிக்க வேண்டாம். நடந்தவை மறப்போம். இனியும் மனதறிந்து எந்த பாவமும் செய்யாமல் , நிம்மதியாக வாழ்வோம்.


தோல்விகளை கண்டு துவளாத மனமும், வெற்றிகளைக் கண்டு மமதை கொள்ளாத மனப் பக்குவமும், கஷ்டங்களை தாங்கி கொள்ளும் மனப் பக்குவமும், வெற்றிப் பாதையை நமக்கு அடையாளம் காட்டும் அந்த பரம்பொருளின் ஆசியும் நம் அனைவருக்கும் கிடைக்கட்டும் !

கீழே , சில காரண காரியங்களுக்கு எந்த தெய்வங்களை வணங்கினால் , உங்கள் குறை தீரும் என்று , நம் முன்னோர்கள் - சித்தர் பெருமக்கள் கூறியவற்றை கொடுத்துள்ளேன்.. உரிய டிபார்ட்மென்ட் மேனஜர் , சூப்பர்வைசர் தானே உடனடியாக தீர்வு கொடுக்க இயலும். முயன்று பாருங்கள்... மனிதம் வளர்ப்போம் !


காரியம் நடக்க
விக்னங்கள், இடையூறுகள் நீங்க - விநாயகர் செல்வம் சேர-ஸ்ரீ மகாலட்சுமி, ஸ்ரீ நாராயணர்நோய் தீர-ஸ்ரீ தன்வந்தரி, தட்சிணா மூர்த்திவீடும், நிலமும் பெற-ஸ்ரீ சுப்ரமண்யர், செவ்வாய் பகவான்ஆயுள், ஆரோக்கியம் பெற-ருத்திரன்மனவலிமை, உடல் வலிமை பெற-ராஜராஜேஸ்வரி, ஸ்ரீ ஆஞ்சநேயர்கல்வியில் சிறந்து விளங்க-ஸ்ரீ சரஸ்வதிதிருமணம் நடைபெற-ஸ்ரீகாமாட்சி அம்மன், துர்க்கைமாங்கல்யம் நிலைக்க- மங்கள கௌரிபுத்திர பாக்கியம் பெற-சந்தான கிருஷ்ணன், சந்தான லட்சுமிதொழில் சிறந்து லாபம் பெற-திருப்பதி வெங்கிடாசலபதிபுதிய தொழில் துவங்க-ஸ்ரீகஜலட்சுமிவிவசாயம் தழைக்க- ஸ்ரீ தான்யலட்சுமிஉணவுக் கஷ்டம் நீங்க-ஸ்ரீ அன்னபூரணிவழக்குகளில் வெற்றி பெற-விநாயகர்சனி தோஷம் நீங்க-ஸ்ரீ ஐய்யப்பன், ஸ்ரீ ஆஞ்சநேயர்பகைவர் தொல்லை நீங்க-திருச்செந்தூர் முருகன்பில்லி, சூன்யம், செய்வினை அகல-ஸ்ரீ வீரமாகாளி, ஸ்ரீ நரசிம்மர்அழியாச் செல்வம், ஞானம், சக்தி பெற-சிவஸ்துதி
நோய் தீர
முடி நரைத்தல், உதிர்தல்-மகாலட்சுமி, வள்ளிகண் பார்வைக் கோளாறுகள்-சிவபிரான், சுப்ரமண்யர், விநாயகர்காது, மூக்கு, தொண்டை நோய்கள்-முருகன்ஆஸ்துமா, சளி, காசம், சுவாசக் கோளாறுகள்-மகாவிஷ்ணுமாரடைப்பு, இருதய கோளாறுகள்- சக்தி, கருமாரி, துர்க்கைஅஜீரணம், குடல்வால், அல்சர், மூலம், மலச்சிக்கல், மஞ்சள் காமாலை, காலரா-தட்சிணாமூர்த்தி, முருகன்நீரிழிவு, சிறுநீரகக் கோளாறு-முருகன்பால்வினை நோய்கள், பெண்களுக்கான மாதவிடாய் கோளாறுகள்-ராஜராஜேஸ்வரி, ஸ்ரீ ரங்கநாதர், வள்ளிமூட்டுவலி, கால் வியாதிகள்-சக்கரத்தாழ்வார்வாதங்கள்-சனிபகவான், சிவபெருமான்பித்தம்-முருகன்வாயுக் கோளாறுகள்-ஆஞ்சநேயர்எலும்பு வியாதிகள்-சிவபெருமான், முருகன்ரத்தசோகை, ரத்த அழுத்தம்-முருகன், செவ்வாய் பகவான்குஷ்டம், சொறி சிரங்கு-சங்கர நாராயணன்அம்மை நோய்கள்-மாரியம்மன்தலைவலி, ஜீரம்-பிள்ளையார்புற்று நோய்- சிவபெருமான்ஞாபகசக்தி குறைவு- விஷ்ணு

மனிதப்பிறவி

மனிதப் பிறவியின் நோக்கம் என்ன ?
(நன்றியுடன் livingextra.com)

மனிதனாகப் பிறந்தவனுக்கு பலவித சுக, துக்கங்கள் உண்டு. இவைகளை அனுபவித்தே ஆக வேண்டும். இப்படி அனுபவிப்பதற்காகவே ஏற்பட்டதுதான் மனைவி, மக்கள், குடும்பம் எல்லாம். இவைகளெல்லாம் இல்லை என்றால், அவனவன் துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு போய் விடுவான். அதனால் தான், மனிதனை சம்சார சாகரத்தில் சிக்க வைக்கிறார் பகவான். ஆனால், இதில் சிக்கிக், சுற்றிச் சுற்றி எவ்வளவு காலம் தான் வருவது? இதிலிருந்து மெதுவாக கழன்று, விடுதலை பெற்று பகவானை அடைய முயற்சி செய்ய வேண்டாமா? இந்தப் பிறவிப் பிணியைப் போக்கிக் கொள்ள வேண்டாமா?

பகவானை அடைவது அவ்வளவு சுலபமல்ல. ஆசாபாசங்கள் மனிதனை, பகவான் பக்கம் போக விடாமல் இழுக்கிறது; அதையும் மீறித் தான் போக வேண்டும். ஒரு ஜென்மாவில் இல்லா விட்டாலும், அடுத்தடுத்து வரும் ஜென்மாக்களிலும், இதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும்.

ஒருவன் ஒரு ஊருக்குப் போகப் புறப்படுகிறான். ஒரு நாளைக்கு 10 கி.மீ., நடக்கிறான். இருட்டி விட்டது. அந்த ஊரில் இரவு தங்கி, மறுநாள் காலையில் நடக்க ஆரம்பிக்கிறான். மறுபடியும் ஒரு 10 கி.மீ., தூரம் நடந்து, இன்னொரு இடத்தை அடைகிறான். அங்கே தங்கி, மறுநாள் நடக்க ஆரம்பிக்கிறான். இப்படி சில நாட்கள் நடந்து, நடந்து ஒருநாள் இவன் போக வேண்டிய இடத்தை அடைந்து விடுகிறான்.

அதுபோல, பகவானை அடைய, நற்கதி பெற ஒரே ஜென்மாவில் முடியாது. அடுத்தடுத்த ஜென்மாவிலும், இடைவிடாமல் முயன்று கொண்டே இருந்தால், ஏதோ ஒரு ஜென்மாவில் இந்தப் பிறவிப் பிணி தொலைந்து, அவனை அடைந்து விடலாம்.

அப்படி இல்லாமல், முதல் நாள் 10 கி.மீ., நடந்து, மீண்டும் வீட்டுக்கே திரும்பி வந்தால், இவன் போக வேண்டிய இடத்துக்கு போய்ச் சேர மாட்டான். அதுபோல, குடும்ப பாசங்களிலிருந்து விடுபட்டு பக்தி செய்து கொண்டே ஒவ்வொரு ஜென்மாவை கடந்து, காலம் வரும்போது அவனடி சேர வேண்டும்.
வண்டியில் கட்டிய மாடு, போக வேண்டிய இடத்துக்கு போய்ச் சேரும்; செக்கில் கட்டிய மாடு நாள் முழுவதும் நடந்தாலும், செக்கையே தான் சுற்றிச் சுற்றி வரும். அதுபோல பகவானை நோக்கி போய்க் கொண்டிருக்க வேண்டும். செக்கு மாடு மாதிரி குடும்பத்தையும், மனைவியையுமே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தால், விமோசனம் ஏது? அதற்காக குடும்பம், மனைவி, மக்கள் என்றால் வெறுத்து ஒதுக்க வேண்டும் என்பதல்ல!

அவர்களுக்கு செய்யவேண்டிய கடமைகளை செய்துகொண்டே , இறைவனை தேடுதலையும் ஒரு கடமையாகக் கொள்ளுங்கள். அதற்க்கு முதலில் உங்கள் ஆத்மாவை அறியவேண்டும். அதன் பிறகு உங்கள் பிறவியின் நோக்கம் உங்களுக்கு புலப்படும்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg_DiiKuX0cUU6TjZVbH_nN3N3ftkAds8cIlr2RaG3TtJHGmWv2x_NS3uRPZArr80T-aCZx_orQUgmNUH_qpGUbBZ1yQerqJXaZ6nD7lNqcmxdDT7RDG3QG1-gATf2q7KyCWx_DVN2SEg4/s320/mookambika-thumb1.png

குடும்ப பாரம் ஒருபக்கம் இருக்கட்டும்; அவர்களுக்காகவே பாடுபட்டு காலத்தை கழிக்க வேண்டாம். இகலோக சுகம் இங்கே கிடைக்கும்; பரலோக சுகம் என்பது அங்கே கிடைக்கும். இங்கே கிடைப்பது நிரந்தரமானதல்ல; அங்கே கிடைப்பது தான் நிரந்தரமானது; நித்யமானது ஒன்றுக்கு முயற்சி செய்யாமல், அநித்யமானதுக்கு ஆசைப்பட்டு வாழ்நாளை வீணாக்க வேண்டுமா?

பெரியோர், மகான்கள், மறுபிறவி என்றாலே நடுங்குகின்றனர். விஷயம் புரியாமலா பயப்படுகின்றனர்? ஏதோ பாதாம் அல்வாவும், பஜ்ஜியும் சாப்பிட்டுக் கொண்டிருப்பதா நித்ய சுகம்! பகவானை அடைந்து விட்டால், பசியும் கிடையாது; தாகமும் கிடையாது. அவனுக்கு கைங்கரியம் செய்து கொண்டே சுகப்படலாமே!

முயற்சி செய்யுங்கள், ஏதோ ஒரு ஜென்மாவிலாவது பலன் கிடைக்கும்!

அரை வேக்காட்டு / போலி சாமியார்களை விட்டுத்தள்ளுங்கள். பெரிய , பெரிய ரிஷிகள், சித்தர்கள் , முனிவர்களை எடுத்துக் கொள்ளுங்கள். அதைப் போலே இருப்பது ஒரு அற்புத அனுபவம் தான். நம் ஆன்மாவும் , முடிவில் அதைத்தான் நாடுமோ ? இறைவனை அடைவதுதான் இறுதி என்றால்... இன்றிலிருந்தே இறை வழிபாட்டையாவது தொடங்குவோமே..!!

குழந்தை மருத்துவம்

குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு வந்தால் செய்ய வேண்டிய மருத்துவம்  (நன்றியுடன் livingextra.com)




 கைக் குழந்தைகளுக்கு ஏதாவது வியாதி என்றால், மிக கவனமுடன் கையாளுங்கள். வாய் திறந்து அவர்கள் பேசும் பருவம் வரும்வரை , மிக மிக கவனத்துடன் பராமரிப்பது அவசியம் .

அறிகுறிகளும், பாதிப்புகளும்
* உடலில் இருந்து அதிக அளவில் நீர் உப்புகள், வைட்டமின்கள் வெளியேறுகின்றன.
* சத்துக் குறைபாடு ஏற்படும்.
* உணவில் இருந்து மைக்ரோ மற்றும் மேக்ரோ நுணூட்டச் சத்துகளை திசுக்கள் உறிஞ்ச முடியாமல் போகும்.
* புரோட்டின் சத்தும் வீணாகும்.
* பசி எடுக்காது.
* ரத்த அளவு குறையும்.
* நாடித் துடிப்பும் குறையும்.
* ரத்த அழுத்தம் குறையும்.
* கை, கால்கள் சில்லிட்டுப் போகும்.
* வெளியேறும் சிறுநீரின் அளவு குறையும்.
* சிறுநீரகம் பாதிக்கப்படும்.
*ரத்ததில் பொட்டாசியம் அளவு குறைவதால் வயிறு வீக்கம், குடல் வேலை செய்யாத நிலை ஏற்படும்.
* பைகார்பனேட் வெளியேறுவதால், அசிடிமியா (Acidemia) பிரச்னை ஏற்பட்டு மூச்சுவிடுவதல் வேகமாகவும், ஆழமாகவும் இருக்கும்.

பரிசோதிக்கும் முறைகள்
பேதியால் பாதிக்கப்ட்ட குழந்தைகளைப் பரிசோதித்து, உடலில் இருந்து நீர் மற்றும் உப்புச் சத்துகள் மிகவும் அதிகமாகக் குறைந்துள்ளதா, மிதமாகக்
குறைந்துள்ளதா, குறையவில்லையா என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
குழந்தை சோர்வாக இருத்தல் அல்லது மயக்கம் அடைதல், குழி விழுந்த கண்கள், வயிற்றுப் பகுதி தோலை இழத்துவிட்டால், மிக மெதுவாகப் பழைய
நிலையை அடைதல் போன்ற அறிகுறிகள் இருந்தால், நீர் மற்றும் உப்புச் சத்துகள் மிகவும் அதிகமாகக் குறைந்துள்ளது என்று அர்த்தம்.
குழந்தை நன்றாக விளையாடிக் கொண்டிருத்தல், கண்கள் குழி விழாமல் இருத்தல், வயிற்றுப் பகுதி தோலை இழுத்துவிட்டால், உடனே பழைய
நிலைக்குத் திரும்புதல் போன்ற அறிகுறிகள் இருந்தால், நீர் மற்றும் உப்புச் சத்துகள் குறையவில்லை என்று அர்த்தம்.

சிகிச்சைகள்

பேதியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை மூன்று வகைகளாகப் பிரித்து அதற்கேற்ப சிகிச்சை அளிக்க வேண்டும்.
சிகிச்சை முறை (நீர் குறையாத குழந்தைகளுக்கானது)
திரவ உணவை அதிகமாகக் கொடுக்க வேண்டும்.
தாய்ப்பால் தொடர்ந்து கொடுக்க வேண்டும்.
தாய்ப்பால் குடிக்காத குழந்தைகளுக்கு அரிசிக் கஞ்சி, மோர், எலுமிச்சைச் சாறு, இளநீர், பருப்பு நீர்,பால், காய்கறி சூப் ஆகியவற்றைக் கொடுக்கலாம்.
வழக்கமாக கொடுக்கும் திரவ உணவுடன், ஒவ்வொருதடவை பேதி ஆகும்போதும் கீழ்க்கண்ட அளவு நீகீகு எனப்படும் உப்பு & சர்க்கரைக் கரைசல்
கொடுக்கவேண்டும்.

இரண்டு வயதுக்கு உள்பட்ட குழந்தைக்கு 50 மில்லி & 100 மில்லி
இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைக்கு 100 மில்லி & 200 மில்லி.

தாய்மார்களுக்கான அறிவுரை
1. ORS திரவத்தை கரண்டி அல்லது பாலாடையில் கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுக்க வேண்டும்.
2. குழந்தை வாந்தி எடுத்தால் பத்து நிமிடங்களுக்குப் பிறகு ளிஸிஷி திரவத்தை மீண்டும் கொடுக்க வேண்டும்.
3. பேதி நிற்கும் வரை ளிஸிஷி திரவத்தையும், பிற திர உணவுகளையும் கொடுக்க வேண்டும்.
சிகிச்சை முறை (மிதமான நீர் குறைந்த குழந்தைகளுக்கானது)
ORS திரவத்தை வயதுக்கும் எடைக்கும் ஏற்ப கொடுக்க வேண்டும். முதல் நான்கு மணி நேரத்துக்குள் கொடுக்க வேண்டும்.

கொடுக்க வேண்டிய அளவு
* பிறந்து 4 மாதங்களும், 6 கிலோ எடையும் உள்ள குழந்தைக்கு 200 மில்லி & 400 மில்லி.
* 4 முதல் 12 மாதமும், 6 முதல் 10 கிலோ எடையும் உள்ள குழந்தைக்கு 400 மில்லி & 700 மில்லி
* ஒன்று முதல் இரண்டு வயது வரையும் 10 முதல் 12 கிலோ எடையும் உள்ள குழந்தைக்கு 700 மில்லி & 900 மில்லி.
* இரண்டு முதல் ஐந்து வயது வரையும் 12 முதல் 19 கிலோ எடையும் உள்ள குழந்தைக்கு 900 மில்லி & 1400 மில்லி.
நான்கு மணி நேரத்துக்குப் பிறகு குழந்தையின் நிலையை மீண்டும் பரிசோதித்து அப்போதைய நிலைக்கு ஏற்பட சிகிச்சை அளிக்க வேண்டும்.
குழந்தைக்குத் தாய்ப்பால் தொடர்ந்து கொடுக்க வேண்டும்.

சிகிச்சை முறை
(மிகவும் அதிக அளவு நீர் குறைந்த குழந்தைகளுக்கானது)
குழந்தையை உடனடியாக மருத்துவமனைக்குக் கொடு சென்று, ரிங்கர் லாக்டேட் என்ற மருந்து நீரை உடலில் ஏற்ற வேண்டும்.
மிகவும் அதிக அளவு சத்துகள் குறையாமல் தடுக்க கீழ்க்கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
* எப்போதும் சாப்பிடுவதற்கு முன் கை, கால்களைக் கழுவ வேண்டும்.
* கொதிக்க வைத்து ஆறிய தண்ணீரைத் தான் குடிக்க வேண்டும்.
* திறந்த வெளியில் கொசுக்களோ, ஈக்களோ மொய்த்த உணவுப் பொருள்களைச் சாப்பிடக்கூடாது.
* சூடு ஆறிய உணவைச் சாப்பிடக்கூடாது.
* பழைய, கெட்டுப்போன உணவைச் சாப்பிடக்கூடாது.
* டின்னில் அடைக்கப்பட்டுக் கிடைக்கும் உணவுப் பொருள்களைச் சாப்பிடக்கூடாது.











மழலைச்செல்வம்

குழந்தை வரம் பெற சில எளிய ஆலோசனை , கை வைத்திய முறைகள்                          (நன்றியுடன் livingextra.com)

 
இன்பமும், துன்பமும் கலந்ததுதான் வாழ்க்கை.சோகம் வாழ்க்கையில் இருக்கலாம் தான். ஆனால், அப்படிப் பட்ட சோகத்தை , நிரந்தரமாக வைத்து விடுவது புத்திர சோகம் . இதனுடைய வலி, வீர்யம் -அதை அனுபவிப்பவர்களை தவிர மற்றவர்கள் புரிந்து கொள்வது கடினம்.
 
தாய்மை இறைவனின் வரப் பிரசாதம். பெண்மைக்கு பெருமை சேர்க்கும் நிகழ்வு. திருமணமாகி, ஒருவருடத்தில், அடிக்கடி உடலுறவு கொண்டும், கருத்தரிக்காமல் போனால், குழந்தையின்மை குறை என்று மருத்துவ ரீதியாக சொல்லப்படுகிறது.

இன்றைக்கு மருத்துவத் துறை எவ்வளவோ முன்னேறி விட்டாலும், இன்றும் ஏராளமானோர் குழந்தையின்மை குறைபாட்டுடன் இருக்கின்றனர். அப்படி இருப்பவர்களுக்கு, இந்த கட்டுரை உதவியாக இருக்கும் என்று மனப்பூர்வமாக நம்புகிறேன்.

மருந்து கால் - நம்பிக்கை முக்கால் என்பார்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள சில வழிமுறைகளை நம்பிக்கையுடன் பின்பற்றினால் , அவர்களுக்கு நிச்சயம் வாரிசு பாக்கியம் உண்டாகும்.

நமது சமீப காலத்து சித்தர் பெருமான் தவத்திரு . பாம்பன் சுவாமிகள் அருளிச் செய்த வேற்குழவி வேட்கை பாராயணம் புத்திர தோஷத்தை நீக்கி,சந்ததி விருத்தியும்,குடும்ப பாரம்பரியத்தைக் காக்கும் திறனுள்ள நல்ல குழந்தைகளை உருவாக்கும். இதைப் பற்றி நமது முந்தைய கட்டுரையில் , ஏற்கனவே எழுதி இருக்கிறேன். அதைப் படிக்காதவர்கள் கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்து படிக்கவும். இது ஒரு மாபெரும் சக்தி வாய்ந்த மந்திரம்.

http://www.livingextra.com/2011/06/blog-post_444.html
 
குழந்தையில்லாதவர்களுக்கு மாதவிடாய் ஆன ஐந்து தினங்களிலும் ஒரு வெள்ளைப்பூண்டு சிறிது வேப்பங்கொழுந்து ஒரு சிறிய விரலி மஞ்சள் துண்டு வைத்து அம்மியில் அரைத்து சாப்பிடச்சொல்வார்கள்.

இப்படி சில மாதம் சாப்பிட்டு தீட்டு நின்று கர்ப்பம் தரித்துவிடும்.

குழந்தை வேண்டுவோர் பாலமுருகன் அல்லது முருகக்கடவுளை வணங்கச்சொல்வார்.மேற்படி எளிய முறையில் மருந்து சாப்பிட்ட அனேகருக்கு குழந்தை பிறந்துள்ளது.
சில எளிய பாட்டி வைத்திய முறையும் , பயனுள்ளதாக இருப்பதாக சித்த மருத்துவர்கள் கூறியுள்ளனர். சித்தர்களின் மூலிகை மருத்துவத்திலும் இதைப் பற்றிய பல குறிப்புகள் கிடைக்கப் பெறுகிறோம்..
அருகம்புல் சாறு காலை உணவுக்கு முன் குடிக்கவும்.செவ்வாழை பழம் மதிய உணவுக்கு பின் சாப்பிடவும். மாதுளம்பழச் சாறு இரவு உணவுக்கு பின் குடித்து வர குழந்தை பேறு கிடைக்கும்.
 பூனைக்காலி விதை, சாதி பத்திரி, சமுத்திரப்பச்சை, சூடம், வசம்பு இவற்றை குறிப்பிட்ட அளவு எடுத்து உலர வைத்து, சூரணம் செய்து காலை மாலை இரு வேளை பாலுடன் அருந்தி வர ஆண்மை உண்டாகும்.

நீர் முள்ளி விதை 30 கிராம் , பாதாம்பருப்பு 10 கிராம் , கசகசா 10 கிராம் ஒரு மணி நேரம் நீரில் ஊறவைத்துக் காய்ச்சி பாலுடன் சேர்த்துக் குடித்து வர விந்து உற்பத்தி அதிகரிக்கும்.

புளிச்ச கீரைகளை,வெங்காயம் சேர்த்து சமைத்து நெய் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் விந்து உற்பத்தி அதிகரிக்கும்.

இலவங்கப் பட்டை கஷாயம் செய்து அருந்தி வந்தால் தாதுவிருத்தி உண்டாகும்.

அரச இலைக் கொழுந்தை அரைத்து சிறிது சூடான பாலில் கலந்து காலை வெறும் வயிற்றில் ஓரிரு மாதங்கள் குடித்து வந்தால் விந்துக் குறை நீங்கி விந்து உற்பத்தியாகும்.

செம்பருத்தி பூ உலர்த்திய சூரணத்துடன் முருங்கைப்பூ உலர்த்திய தூளும் சேர்த்துச்சாப்பிட்டு வந்தால் ஆண்மை குறைபாடு நீங்கும்.

கானா வாழை சமூலம், தூதுவ‌ளைப்பூ, முருங்கைப்பூ ஆகியவற்றை ஒரு குவளை தண்ணீரில் போட்டுப் பாதியாகக் காய்ச்சிப் பாலும் கற்கண்டும் கலந்து 40 நாட்கள் சாப்பிட‌ தாது பலப்படும்.

முருங்கை, ஆப்பிள், முந்திரி, பாதாம்பருப்பு, உலர்திராட்சை, பேரீட்சை, தேன், நெல்லி, மா, பலா, செவ்வாழை, கொத்தமல்லி, முளைதானியங்கள், திராட்சை, அன்னாசி, தேங்காய்பால் இவைகளை சாறு எடுத்து சாப்பிட்டுவர ஆண்மைக் குறைவு நீங்கும்.

அத்திப்பழத்தை உலர்த்திப் பொடி செய்து சூரணமாக பாலில் போட்டு சாப்பிட ஆண் ஆண் மலடு அகலும்.

தொட்டால் சிணுங்கி இலையை 15 கிராம் எடுத்து இரவு பாலில் கலந்து சாப்பிட ஆண்மை பெருகும்.

அரசமரத்தின் பட்டை, வேர், விதை இவற்றை பாலில் கொதிக்கவைத்து ஆறிய பின் அதில் தேன் கலந்து தொடர்ந்து 1 மண்டலம் அருந்தி வந்தால் தாது விருத்தியடையும்.

அரச மரத்தின் இலை, பட்டை, வேர், விதை இவற்றை இடித்துபொடியாக்கி வைத்துக்கொண்டு கஷாயம் செய்து அருந்தி வந்தால் கருப்பைக் கோளாறுகள் குறையும்.

முருங்கைப் பூ பொடியை தேனில் கலந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் ஆண்மை பெருகும்.


நிலபூசணிக்கிழங்குச் சாறுபிழிந்து, பசும்பால் விட்டு, சர்க்கரை காலை, மாலை சாப்பிட்டுவர ஆண்மைக் குறைவு நீங்கும்.

இரவு படுக்கைக்குச் செல்லும் முன் தினசரி ஒரு மாதுளம் பழம் சாப்பிட்டுவர ஆண்மைக் குறைவு நீங்கும்.

செம்பருத்திப் பூவைச் சுத்தம் செய்து நிழலில் உலர்த்தி நன்றாக இடித்துத் இரவில் ஒரு சிட்டிகைத் எடுத்து வாயில்போட்டு பசும்பாலைச் சாப்பிட்டுவர ஆண்மைக் குறைவு நீங்கும்.

அரை கைப்பிடிய‌ள‌வு கொத்த‌ம‌ல்லி இலையை வாயில் போட்டு மென்று தின்று வந்தால் தாது விருத்தி உண்டாகும்.தொட‌ர்ந்து 40 நாட்கள் சாப்பிட்டு வ‌ர‌ வேண்டும்.

தவசிக்கீரை,முருங்கைக்கீரை சாப்பிட்டுவர ஆண்மைக் குறைவு நீங்கும்.

மாதுளம்பழம் தினமும் இரவு உணவுக்கு பின் சாப்பிட விந்து விருத்தியாகும்.

வால் மிளகு, வாதுமைப்பருப்பு, கற்கண்டு, கசகசா இவற்றை சம அளவு எடுத்து அரைத்து நெய்யையும் சேர்த்து அடுப்பில் வைத்து பதமாக வேகவைத்து தினமும் இரு வேளை சாப்பிட்டு வர விந்து வலிமை பெறும்.

தேங்காய்ப்பால் எடுத்து அரை டம்ளர் தினமும் காலையில் வெறும் வயிற்றில்அருந்தி வர விந்து விருத்தியாகும்.

முறைப்படி, யோகாசனங்களை மேற்கொள்ளுவதன் மூலமும் , குறைபாடுகளை சரி செய்ய முடியும் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

யோகாசனங்களை மேற்கொண்டால் முழுப்பலனை பெறலாம். புரதம் அதிகமுள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும் ( மீன், வெண்மாமிசம், முட்டைகள்). வெங்காய சாற்றுடன், தேன் / நெய், நெல்லிக்காய் பொடி, பால், வெண்ணை இவைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

செய்ய வேண்டிய யோகாசனங்கள் (முறையாக பயின்ற பின்)
1. சூர்ய நமஸ்காரம்
2. ஹாலாசனம்
3. சிரசானம்
4. பத்த கோனாசனம்
5. கூர்மாசனம்
6. அர்த்த மத்ஸ்யேந்திர ஆசனம்
7. பரியாங்காசனம்
8. பஸ்சிமோத்ஸானம்
9. மூலபந்தாசனம்
10. சர்வாங்காசனம்
11. புஜங்காசனம்
12. தநுராசனம்
13. உபவிஷ்ட கோனாசனம்
14. கந்தாசனம்
15. சவாசனம்.

கூடிய விரைவில் , குறைகள் நீங்கப் பெற்று - மழலை இன்பம் உங்களுக்கு கிடைக்க , இறைவன் அருள் கிடைக்கட்டும்...!


 

குழந்தையின் அறிவு


நாம் பார்க்கும் , கேட்க்கும் , உணரும் , சுவைக்கும் , முகரும் அனைத்துமே நமது ஞாபகங்கள் ஆகும் . இது முதலில் முதலில் குறைந்த நேரமே மனதில் இருக்கும் (சென்சரி மெமரி ). உடனே மறந்து விடும் .

இந்த சென்சரி மெமரியில் நாம் முழு கவனத்தை செலுத்தி ஆழ்ந்து கவனித்தால் அது ஷார்ட் டெர்ம் மெமரி ஆக பதிவாகும் .இதுவும் சில மணித்துளிகளுக்கு மட்டும் இருக்கும் .

ஷார்ட் டெர்ம் மெமரி ஐ திரும்ப திரும்ப செய்யும்போது அது நாள் பட்ட ஞாபக சக்தியாக மாறும் .

எனவே ஞாபக சக்திக்கு மிகவும் முக்கிமானது இரண்டு :
ஆர்வம் மற்றும் கவனம்

திரும்ப திரும்ப செய்தல்
.

மேலும் நாள் பட்ட ஞாபகம் கூட மறக்க வாய்ப்பு உள்ளது , இதுவும் நல்லது தான் . சில சமயம் வாழ் நாள் முழுதும் நினைவில் இருக்கும்.நாள் பட்ட ஞாபகத்தை இரண்டு வகையாக பிரிக்கலாம் :
explicit & implicit

explicit என்பது கொஞ்சம் யோசித்தால் நினைவுக்கு கொண்டுவர முடியும்

implicit என்பது யோசிக்க தேவை இல்லாமல் உடனே நினைவுக்கு கொண்டு வருதல்

நினைவுத் திறனை சிறு உதாரணம் கொண்டு விளக்கலாம் :
மிதி வண்டி ஓட்ட பழகுதலை எடுத்துகொள்வோம்


யாரோ ஓட்டுவதை நாம் பார்ப்பது - சென்சரி மெமரி
முதன் முதல் ஓட்ட காற்று கொள்வது - ஷார்ட் டெர்ம் மெமரி
தத்தி தத்தி ஓட்டுவது - லாங் டெர்ம் explicit மெமரி
தயவே இல்லாமல் ஓட்டுவது -லாங் டெர்ம் implicit மெமரி (சாகும் வரை மறக்காது )


இனி நினைவு திறனை அதிகரிக்கும் வழிகள்


1 . எதையும் தாய் மொழியிலேயே சிந்திக்க வேண்டும் , நீங்கள் படிப்பது ஆங்கிலமோ , ஹிந்தியோ , பிரெஞ்சோ - உங்கள் தாய் மொழி என்னவோ அதில் சிந்தித்து மனதில் பதிய செய்ய வேண்டும்


2 . புரியாமல் எதையும் படிக்க கூடாது . ஒரு வரி புரிய ஒரு நாள் ஆனாலும் பரவாயில்லை .

3 . முழு கவனம் மிக அவசியம் .


4 . mnemonics வைத்து படிப்பது ஒரு கலை . அதை உங்கள் குழந்தைக்கு கற்று கொடுங்கள்
Example - news - north ,east,west,south ....

5 . படித்த வுடன் எழுதி பார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் . ஹோம் வொர்க் என்ற பெயரில் கடமைக்கு எழுதும் சடங்கு பயனில்லை.

6 . படங்களுடன் கூடிய தகவல்கள் மனதில் பதியும் . பட விளக்கங்களை திரும்ப திரும்ப வரைந்து பார்க்க சொல்லவேண்டும்

7 . நல்ல உறக்கம் அவசியம் . குறைந்தது 8 மணி நேர தூக்கம் கண்டிப்பாக தேவை


8 .இரவில் சீக்கிரம் தூங்கி அதிகாலை படிக்கும் படி சொல்லவேண்டும் .

9 . தூங்க போகும் முன் அன்று படித்த அனைத்தையும் ஒரு முறை மேலோட்டமாக நினைவு படுத்தி பார்க்க வேண்டும் . அப்படி செய்யும் போது நாம் தூங்கினாலும் நம் மூளையின் சில மூலைகள் விழிப்புடன் இருந்து தகவல் களை ஷர்ட் டெர்ம் மெமரியில் இருந்து லாங் டெர்ம் மெமரியில் பதிவு செய்து கொண்டு இருக்கும். இது மிக முக்கியமான பயிற்சி ஆகும் .

10 . மாவு சத்து உள்ள உணவுகள் மந்த நிலையை ஏற்படுத்தும் , எனவே புரதம் நிறைந்த எளிதில் செரிக்கும் உணவை சேர்த்துக் கொள்வது நல்லது.


 



சதுரகிரிமலை

சதுரகிரிமலை (நன்றியுடன் livingextra.com)

நோய் தீர்க்கும் மலை: சதுரகிரி மலையில் ஓடுகின்ற தீர்த்தங்களும், மூலிகைகளும் பல நோய்களை தீர்க்க வல்லது. இந்த மலை ஏறி இறங்கினால் உடலில் உள்ள வியர்வை வெளியேறி, மூலிகை கலந்த காற்றுபட்டு பல நோய்கள் குணமாவதாகச் சொல்கிறார்கள். சித்த மருத்துவர்கள் பலர் மூலிகைகளை இங்கிருந்து சேகரித்து செல்கின்றனர்.

திசைக்கு நான்கு கிரிகள் (மலை)வீதம் பதினாறு கிரிகள் சமமாக சதுரமாக அமைந்த காரணத்தால் சதுரகிரி என்ற பெயர் ஏற்பட்டது. மலையின் பரப்பளவு 64 ஆயிரம் ஏக்கர்.
[theerththam.jpg]

தாணிப்பாறை அடிவாரம் - கருப்பர் சந்நிதி அருகே உள்ள தீர்த்தம்

* மகாலிங்கம் கோயிலுக்கு வடக்கில் உள்ள மூலிகைகள் நிறைந்த குன்றை "சஞ்சீவி மலை' என்கின்றனர்.

*சந்தன மகாலிங்கம் கோயில் அருகே 18 சித்தர்கள் சன்னதி உள்ளது.
*ஆடி அமாவாசை முக்கிய விழா. தை அமாவாசை, மகாளய அமாவாசை, மகா சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி, மார்கழி முதல் நாள் ஆகிய நாட்களிலும் அதிக கூட்டம் இருக்கும்.

* பழநியிலுள்ள நவபாஷாண முருகன் சிலையை போகர் சதுரகிரி மலையில் தங்கியிருந்தபோதே செய்ததாக கூறப்படுகிறது.

*இங்குள்ள ஜோதிப்புல்லை பகலில் நீரில் நனைத்து விட்டு, இரவில் பார்த்தால் தீபம் ஏற்றியது போல் இருக்கும். பழங்காலத்தில் சித்தர்கள் வெளிச்சத்திற்காக இந்த புல்லை உபயோகித்துள்ளார்கள்.

*மகாலிங்கம் கோயிலின் வடக்கே "ஊஞ்சல் கருப்பண சாமி' கோயில் உள்ளது.
* சுந்தர மகாலிங்கத்திற்கு அமாவாசை நாட்களில் மதியம் 1 மணிக்கு அபிஷேகம் துவங்கும்.

* ஆடி அமாவாசை தவிர மற்ற அமாவாசை நாட்களில் தேனும், தினைமாவும் பிரசாதமாக தரப்படுகிறது.

* சதுரகிரி மலைக்கு மின்சார வசதி கிடையாது. ஜெனரேட்டர் பயன்படுத்துகின்றனர்.

இருப்பிடம்:
மதுரை மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்டில் இருந்து வத்திராயிருப்பு செல்லும் பஸ்களில் சென்றால், தாணிப்பாறை விலக்கில் இறங்கலாம். இங்கிருந்து 7 கி.மீ., தூரம் சென்றால் சதுரகிரி மலை அடிவாரமான தாணிப்பாறை வரும். அங்கிருந்து மலை ஏறி, 10 கி.மீ., நடந்தால் மகாலிங்கத்தை தரிசிக்கலாம்.

அல்லது , மதுரையிலிருந்து ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் - செங்கோட்டை செல்லும் பஸ் உள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் , செங்கோட்டை செல்லும் பஸ்ஸில் ஏறி - கிருஷ்ணன் கோவில் நிறுத்தத்தில் இறங்கி - அங்கிருந்து வத்திராயிருப்பு செல்லுங்கள். ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும் பேருந்து வசதி உள்ளது.

அங்கிருந்து தாணிப் பாறைக்கு - மினிபஸ் அல்லது ஆட்டோவில் சென்று விடுங்கள்.

திறக்கும் நேரம்:
காலை 6- 12 மணி, மாலை 4- இரவு 9 மணி. விசேஷ நாட்களில் நடை திறக்கும் நேரம் மாறுபடும்.போன்: 98436 37301, 96268 32131

மலைக்கு மேலே - சாப்பாடு பற்றிய கவலை வேண்டாம். எந்த நேரமும், உங்கள் வயிறை குளிரவைக்க " கஞ்சி மடம் ' உள்ளது. உங்களுக்கு குறைந்த பட்சம், கஞ்சியோ , கூழோ , பழைய சோறோ - நிச்சயம் கிடைக்கும். 24 மணி நேரமும் என்பதுதான் விசேஷம். மிகப் பெரிய குழுவாக சென்றால், முன்கூட்டியே சொல்லி விடுங்கள். சுடச்சுட சாதம் கிடைக்கும்.

சதுரகிரி
தல வரலாறு : சதுரகிரி மலை அடிவாரத்திலுள்ள கோட்டையூரில் பிறந்தவன் பச்சைமால். இவன் பசுக்களை மேய்த்து பிழைத்தான். இவனது பெற்றோர் தில்லைக்கோன்- திலகமதி. மனைவி சடைமங்கை. இவள் மாமனார் வீட்டில் பாலைக் கொடுத்து விட்டு வருவாள். ஒருமுறை, பால் கொண்டு சென்ற போது எதிரில் வந்த துறவி அவளிடம் குடிக்க பால் கேட்டார். சடைமங்கையும் கொடுக்கவே, தினமும் தனக்கு பால் தரும்படி கேட்டார். சடைமங்கையும் ஒப்புக்கொண்டாள்.

வழக்கத்தை விட சற்று பால் குறைவதைக் கவனித்த சடைமங்கையின் மாமனார், இதுபற்றி மகன் பச்சைமாலுக்கு தெரிவித்து விட்டார். பச்சைமால் தனது மனைவியை பின் தொடர்ந்து சென்று, அவள் துறவிக்கு பால் தந்ததை அறிந்து கோபம் கொண்டு அடித்தான். தனக்கு பால் கொடுத்ததால் அடி வாங்கிய சடைமங்கை மேல் இரக்கம் கொண்ட அவர், அவளுக்கு "சடதாரி' என்று பெயரிட்டு காக்கும் தேவியாக சிலையாக்கி விட்டு மறைந்தார். மனைவியை பிரிந்த பச்சைமால், மனம் திருந்தி, சதுரகிரிக்கு வந்த அடியவர்களுக்கு பால் கொடுத்து உதவி செய்தான்.

சுந்தரானந்த சித்தர் என்பவர் செய்த பூஜைக்கும் பால் கொடுத்து உதவினான். சித்தர்கள் செய்த பூஜையில் மகிழ்ந்த சிவன் இத்தலத்தில் அவர்களுக்கு காட்சி கொடுத்தார். பச்சைமாலுக்கும் சிவதரிசனம் கிடைத்தது. ஒருநாள், சிவன் ஒரு துறவியின் வேடத்தில், சிவபூஜைக்கு பால் கொடுக்கும் காராம்பசுவின் மடுவில் வாய்வைத்து பால் குடித்து கொண்டிருந்தார். இதைக்கண்ட பச்சைமாலுக்கு கடும் கோபம் ஏற்பட்டு, துறவியின் தலையில் கம்பால் அடித்தான். அப்போது, சிவன் புலித்தோல் அணிந்து காட்சி கொடுத்தார். சிவனை அடித்துவிட்டதை அறிந்த பச்சைமால் மிகவும் வருந்தி அழுதான்.


சிவபெருமான் அவனை தேற்றி, "" நீ தேவலோகத்தை சேர்ந்தவன். உன் பெயர் யாழ்வல்லதேவன். நீ யாழ் மீட்டி என்னை பாடி மகிழ்விப்பாய். சிற்றின்ப ஆசை காரணமாக என்னால் சபிக்கப்பட்டு பூலோகத்தில் மனிதனாக பிறந்தாய். உன்னை மீட்டு செல்லவே வந்தேன்,'' என்று கூறி அவனுக்கு முக்தி அளித்தார். அத்துடன் அங்கிருந்த சித்தர்களின் வேண்டுகோளின்படி "மகாலிங்கம்' என்ற திருநாமத்துடன் அங்கேயே எழுந்தருளினார். இது லிங்கங்களிலேயே பெருமை வாய்ந்தது என சதுரகிரி புராணம் கூறுகிறது. இன்றும் கூட மகாலிங்கம் சாய்ந்த நிலையில் இருப்பதையும், தலையில் அடிபட்ட தழும்பையும் காணலாம்.
சதுரகிரி மலை ஏறுவது கடினமானது. மலையே சிவமாக இருப்பதால் பக்தர்கள் காலில் செருப்பு இல்லாமல் ஏறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

தாணிப்பாறை அடிவாரத்திலிருந்து மலையேற வேண்டும்.
மலையடிவாரத்தில் ஆசீர்வாத விநாயகரை வணங்கியபின் சிவசிந்தனையுடன் மலை யாத்திரையைத் தொடங்க வேண்டும். செல்லும் வழியில் ராஜயோக காளி, பேச்சியம்மன், கருப்பணசாமி கோயில்கள் உள்ளன. இதனை அடுத்து குதிரை ஊற்று, வழுக்குப்பாறைகள் வருகின்றன.

இந்தப்பாறைகளில் மழைக்காலங்களில் செல்வது கடினம். சிறிது தூரம் சென்றதும் அத்திரி மகரிஷி பூஜித்த லிங்கத்தை தரிசிக்கலாம். அடுத்து வருவது காராம் பசுத்தடம். இந்த இடத்தில் தான் சிவன் துறவி வேடம் கொண்டு காராம் பசுவின் மடுவில் பால் அருந்தியதாக வரலாறு.


இதனையடுத்து கோரக்க சித்தர் தவம் செய்த குகையும், பதஞ்சலி முனிவரின் சீடர்கள் பூஜித்த லிங்கமும் உள்ளது. இந்த லிங்கத்தை தரிசிக்க வேண்டுமானால், ஆகாய கங்கை தீர்த்தத்துக்கு மேல் உள்ள விழுதுகளைப் பிடித்து தொங்கி ஏறித்தான் செல்ல வேண்டும். இது ஆபத்தான இடம். இதன் பவித்திரம் உணராமல் இங்கே குளிக்கவோ, தண்ணீர் எடுக்கவோ பக்தர்கள் முயற்சிக்கக் கூடாது. இதை ஒட்டிய குகையில் உள்ளே ஒரு சிறிய லிங்கம் உள்ளது. இதை நீங்கள் காணும்போது , மெய் சிலிர்க்கும் அனுபவம் உங்களுக்கு ஏற்படுவது உறுதி.


கோரக்கர் மலைக்கு நேர் மேலே செங்குத்தான மலையில் சற்று மேலே ஏறினால் ஒரு லிங்கம் உள்ளது. கொஞ்சம் இளவட்ட ஆளுங்க போக முடியும். ரொம்பவே செங்குத்தான பாதை. அதனால் , அனைவரும் முயற்சிக்க வேண்டாம்.



இதையடுத்து இரட்டை லிங்கத்தை தரிசிக்கலாம். சற்று தூரத்தில் சின்ன பசுக்கடை என்ற பகுதியை கடந்தால் நாவல் ஊற்று வருகிறது. இந்த ஊற்று நீருக்கு சர்க்கரை நோயைக் குணமாக்கும் மகிமை இருப்பதாக கூறப்படுவதால், பக்தர்கள் இதைப் பருகுகிறார்கள். பின்னர், பச்சரிசிப்பாறை, வனதுர்க்கை கோயில், பெரிய பசுக்கிடை, பிலாவடி கருப்பு கோயிலைத் தரிசித்து, மகாலிங்கம் கோயிலை அடையலாம். மலையிலுள்ள 10 கி.மீ. தூரத்தை கடக்க 3 முதல் 4 மணி நேரம் வரை ஆகும்.



இரட்டை லிங்கம்: ஆனந்த சுந்தரம் என்ற வியாபாரிக்கு சிவன் மீது அளவு கடந்த ஈடுபாடு இருந்தது. அவரது மனைவி ஆண்டாள். பெருமாள் பக்தை. இவர்கள் இருவரும், தான் வணங்கும் கடவுளே பெரியவர் என்று தர்க்கம் செய்வர். இதற்கு விடை காண இருவரும் சதுரகிரி வந்து தியானம் செய்தனர். இவர்கள் முன்பு சிவன் தோன்றினார்.

""சிவபெருமானே! தாங்களே அனைத்துமாக இருக்கிறீர்கள், என்பதை என் மனைவியிடம் தெரிவிக்க வேண்டும்,''என வேண்டினார் வியாபாரி. சிவன் ஆண்டாளிடம் சென்றார். அவளோ, ""நான் உம்மை நினைத்ததே இல்லை. பெருமாளை நினைத்தே தவம் செய்தேன்,'' என்றாள். அப்போது சிவனும், விஷ்ணுவும் இணைந்து சங்கரநாராயணராக காட்சி கொடுத்தனர். இதன் அடிப்படையில் மலை ஏறும் வழியில் சிவலிங்கம், விஷ்ணு லிங்கம் என இரட்டை லிங்கம் பிரதிஷ்டை செய்து ராமதேவ சித்தர் என்பவர் பூஜை செய்தார். இந்த சன்னதிக்கு எதிரே ராமதேவர் குகை இருக்கிறது.



பிலாவடி கருப்பு: வணிகர் ஒருவருக்கு சிவன் கோயில் கட்டும் ஆசை இருந்தது. ஆனால், பணம் போதவில்லை. பலரிடம் உதவி கேட்டும் இவரது தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை. முனிவர் ஒருவர், ""சதுரகிரியில் உள்ள காலங்கிநாத சித்தரிடம் சென்றால் உனது விருப்பம் நிறைவேறும்,'' என்றார்.

வணிகரும் சதுரகிரி வந்து காலங்கிநாதரை தரிசித்தார். அவர் அங்குள்ள சில மூலிகைகளைக் கொண்டு உலோகங்களை தங்கமாக்கி அவனிடம் கொடுத்தார். மீதமிருந்த தங்கத்தையும், தங்கம் தயாரிக்க பயன்பட்ட தைலத்தையும் ஒரு கிணற்றில் கொட்டி பாறையால் மூடினார். இந்த கிணற்றுக்கு காவலாக கருப்பசுவாமியை நியமித்தார். இவரது சன்னதியில் மூன்று காய்களுடன் கூடிய பலாமரம் உள்ளது. இதனால், இவரை "பிலாவடி கருப்பர்' என அழைத்தனர். இந்த மரத்தில், ஒரு காய் விழுந்து விட்டால் இன்னொரு காய் காய்க்கும் அதிசயம் பல ஆண்டுகளாக நடக்கிறது.


பெரிய மகாலிங்கம்: நடுக்காட்டு நாகர் சன்னதியை அடுத்து, லிங்க வடிவ பாறை உள்ளது. இதை "பெரிய மகாலிங்கம்' என்கின்றனர். பெரிய மகாலிங்கத்திற்கு அடியில் சிறு லிங்கம் உள்ளது. சாதாரண நாட்களில் இதற்கு மட்டுமே அபிஷேக ஆராதனை நடக்கிறது. சிவராத்திரியன்று மட்டும் பெரிய லிங்கத்திற்கு சிறப்பு பூஜை நடக்கிறது.


தவசிப்பாறை: மகாலிங்கம் கோயிலிலுள்ள ஆனந்தவல்லி அம்மன் சன்னதிக்கு பின்புறமாக சென்று, மேற்கு பக்கமாக ஏறி, கிழக்கு பக்கமாக இறங்கினால் தவசிப்பாறையை (தபசுப்பாறை) அடையலாம். இது கடல்மட்டத்தில் இருந்து 5000 அடி உயரத்தில் உள்ளது. கோயிலில் இருந்து தவசிப்பாறை செல்ல குறைந்தது 2 மணி நேரமாகும். இது மிகவும் சிரமமான பயணம். பாறைக்கு செல்லும் வழியில் "மஞ்சள் ஊத்து' தீர்த்தம் உள்ளது.
[p91a.jpg]

தவசிப்பாறையில் சித்தர்கள் தவம் செய்யும் குகை உள்ளது. குகைக்குள் ஒரு ஆள் மட்டுமே மிகவும் சிரமப்பட்டு செல்லும்படியான துவாரம் உள்ளது. உள்ளே சென்ற பிறகு, பத்து பேர் அமர்ந்து தியானம் செய்ய வசதியிருக்கிறது. இதனுள் ஒரு லிங்கம் உள்ளது. மன திடம் உள்ளவர்கள் மட்டுமே இந்த குகைக்குள் சென்று லிங்கத்தை தரிசனம் செய்ய முடியும். இந்த குகையில் தான் 18 சித்தர்களும் தினமும் சிவபூஜை செய்வதாக கூறப்படுகிறது. குகைக்கு மேலே 9 பெரிய பாறாங்கற்கள் உள்ளன. இவற்றை "நவக் கிரக கல்' என்கிறார்கள். இதற்கு அடுத்துள்ள "ஏசி' பாறையின் கீழ் அமர்ந்தால், கடும் வெயிலிலும் மிகக் குளுமையாக இருக்கும். தவசிப் பாறையிலிருந்து கிழக்குப்பக்கமாக கீழிறங்கும் வழியில் "வெள்ளைப்பிள்ளையார்' பாறை உள்ளது. பார்ப்பதற்கு விநாயகர் போல் தெரியும். இங்குள்ள ஒரு மரத்தின் இடையில் அரையடி உயர பலகைக்கல் விநாயகர் சிலை உள்ளது. அருகில் நடுக்காட்டு நாகர் சன்னதி உள்ளது.

சுந்தரமூர்த்தி

கைலாயத்தில் சிவ பார்வதி திருமணம் நடந்தபோது, அகத்தியர் தெற்கே வந்தார். அவர் சதுரகிரியில் தங்கி லிங்க வழிபாடு செய்தார். அவர் அமைத்த லிங்கமே சுந்தரமூர்த்தி லிங்கம் ஆகும். சதுரகிரியில் அகத்தியர் தங்கியிருந்த குன்றை "கும்ப மலை' என்கின் றனர். அகத்தியர் பூஜித்த லிங்கத்தை சுந்தரானந்த சித்தர் பூஜித்து வந்தார். இதனாலேயே இந்த லிங்கம் "சுந்தரமூர்த்தி லிங்கம்' எனப்படுகிறது. அருளை வழங்குவது "சுந்தரமகாலிங்கம்', பொருளை வழங்குவது "சுந்தரமூர்த்தி லிங்கம்' என்று கூறுவர். சதுரகிரி கோயிலின் நுழைவுப்பகுதியில் இந்த லிங்கம் இருக்கிறது. இரவு 12 மணியளவில் இந்த சன்னதி அருகே யாரும் செல்வதில்லை. அப்போது, சித்தர்கள் அவரை தரிசிக்க வருவதாக ஐதீகம்.

பார்வதி பூஜித்த லிங்கம் :
சுந்தர மகாலிங்கம் கோயிலிலிருந்து சற்று மேடான பகுதியில் சந்தன மகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. பிருங்கி மகரிஷி சிவனை மட்டும் வழிபட்டு, சக்தியைக் கவனிக்காமல் போய்விடுவார். எனவே, சிவனுடன் ஒன்றாக இணைந்திருக்க வேண்டி, அவர் உடலில் பாதியைக் கேட்டு, பூலோகம் வந்து சதுரகிரி மலையில் லிங்க பூஜை செய்தாள். தினமும் சந்தன அபிஷேகம் செய்தாள். மகிழ்ந்த சிவன் பார்வதியை தன்னுடன் இணைத்து "அர்த்தநாரீஸ்வரர்' ஆனார் என தல வரலாறு கூறுகிறது. பார்வதி தான் அமைத்த லிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய ஆகாய கங்கையை வரவழைத்தாள். இங்குள்ள சந்தன மாரியம்மன் சன்னதி அருகில் ஓடும்


இந்த தீர்த்தத்தால் சந்தன மகாலிங்கத்திற்கு அபிஷேகம் செய்கின்றனர். பார்வதி பூஜித்த சந்தன மகாலிங்கத்தை, சட்டைநாத சித்தர் பூஜித்து வந்தார். மகாசிவராத்திரியன்று பக்தர்களே சந்தன மகாலிங்கத்தின் மீது பூத்தூவி வழிபடுகின்றனர்.


இக்கோயிலில் சந்தன மகாலிங்கம், சந்தன விநாயகர், சந்தன முருகன், சந்தன மாரி என எல்லாமே சந்தன மயம் தான். 18 சித்தர்களுக்கும் சிலை உள்ளது. செண்பகப்பூவை காயவைத்து வாசனைக்காக விபூதியில் கலந்து கொடுக்கிறார்கள்.இங்கிருந்து ஒரு கி.மீ. தூரத்தில் வனகாளி கோயில் உள்ளது.


லிங்க வடிவ அம்பிகை

சிவனைப்போலவே அம்மனும் இங்கு நிரந்தரமாக தங்கி அருள்பாலிக்க வேண்டும் என விரும்பிய சித்தர்கள் நவராத்திரி நாட்களில் கடுமையாக தவம் இருந்தனர். இதை ஆனந்தமாக ஏற்ற அம்மன் "ஆனந்தவல்லி' என்ற திருநாமத்தில் லிங்கவடிவில் எழுந்தருளினாள். சுந்தரமகாலிங்கம் சன்னதிக்கு பின்புறம் இவளது சன்னதி உள்ளது. நவராத்திரி நாட்களில் உற்சவ அம்மனின் பவனி நடக்கும். விஜயதசமியன்று அம்மனுக்கு மகிஷாசுரமர்த்தினி அலங்காரம் செய்து பாரிவேட்டை நடக்கிறது.


சதுரகிரியில் தீர்த்தங்கள்
சந்திர தீர்த்தம்

சதுரகிரியில் சுந்தர மகாலிங்க மலையில் 'சந்திர தீர்த்தம்' இருக்கிறது.இந்த சந்திர தீர்த்தத்தில் இறைவனை வேண்டி வணங்கி ஒரு முறை நீராடினால் கொலை, காமம், குரு துரோகம் போன்ற பஞ்சமா பாதங்களிலிருந்து நீங்கி புண்ணியம் பெறலாம்.

கெளண்டின்னிய தீர்த்தம்.

சந்திர தீர்த்தத்திற்கு வடபுறத்தில் உள்ளது இந்தத் தீர்த்தம். இது தெய்வீகத் தன்மை வாய்ந்த நதியாகும். வறட்சியுற்ற காலத்தில் தேவர்களும், ரிஷிகளும் சிவபெருமான் வேண்ட, ஈசன் தமது சடை முடியில் உள்ள கங்கைலிருந்து ஒரு துளி எடுத்து நான்கு கிரிகளுக்கும் மத்தியில் விட்டு, லிங்கத்தில் மறைந்தார் என்பது ஐதீகம்.

கங்கை, கோதாரி, கோமதி, சிந்து, தாமிரவருணி, துங்கபத்திரை முதலிய புண்ணிய நதிகளுக்கு நீராடிய பயனுண்டு. இந்த நதியில் நீராடுவதால் சகல பாவங்களும் தீர்வதால் இதற்கு ''பாவகரி நதி'' என்னும் பெயரும் உண்டு.

சந்தன மகாலிங்கம் தீர்த்தம்.

இச்சதுரகிரியின் மேல் 'காளிவனம்' என்கிற இருண்டவனம் ஒன்றுள்ளது. அவ்வனத்திலிருந்து வருகிற தீர்த்தம் சந்தனமகாலிங்க தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. உமையாள் பிருங்க முனிவர் தம்மை வணங்காமல் ஈசனை வணங்கியமையால் ஏற்பட்ட கோபத்தின் காரணமாகச் சிவபெருமானை விட்டுப் பிரிந்து, அர்த்த நாரீஸ்வரர் என்கிற சிவசக்தி கோலத்தில் இருக்க வேண்டி சதுரகிரிக்கு வந்து லிங்கப் பிரதிஷ்டை செய்து அபிஷேகத்திற்கு வரவழைத்த ஆகாய கங்கையாகும்.

இப்புண்ணிய தீர்த்ததில் நீராடினால், எந்தப் பாவமும் நீங்கி முக்தி கிடைக்கும்.

இது தவிர, சதுரகிரியில் பார்வதி தேவியின் பணிப்பெண்களான சப்த கன்னியர்கள் தாங்கள் நீராடுவதற்கு உண்டாக்கிய 'திருமஞ்சனப் பொய்கை' உண்டு.

காலாங்கிநாதரால் உண்டாக்கப்பட்ட 'பிரம்மதீர்த்தம்' ஒன்று சதுரகிரி மலைக்
காவலராகிய கருப்பணசுவாமி சன்னதி முன்பாக இருக்கிறது. இது தவிர கோரக்கர், இராமதேவர், போகர் முதலிய மகரிஷிகளால் உண்டாக்கப்பட்ட 'பொய்கைத் தீர்த்தம்'', ''பசுக்கிடைத் தீர்த்தம்'', 'குளிராட்டித் தீர்த்தம்' போன்ற அனேக தீர்த்தங்கள் சதுரகிரி மலையில் உள்ளன.மகாலிங்கம் கோயிலிலிருந்து சாப்டூர் செல்லும் வழியில் உள்ள குளிராட்டி பொய்கையில் நீர் வற்றாது. இதில் குளித்தால் கிரக தோஷம் விலகும் என்பது நம்பிக்கை.

மகரிஷிகளும், சித்தர்களும் இன்றும் அருவுருவாக வாழ்ந்தும் அருள் வழங்கும் வண்ணம் சதுரகியில் வீற்றிருக்கிறார்கள்.

பொதுவாகவே மலைகளின் மேல், மனிதர்களுக்கு ஆயுளும், ஆரோக்கியமும் தரும் அற்புதமான பல மூலிகைகளும், மருத்துவ குணம் நிறைந்த மரம் செடி கொடிகள் யாவும் இருக்கின்றன. இவைகளைத் தழுவி வரும் காற்று நம் மீதுபட்டவுடன் உடலில் உள்ள நோய்கள் தீர்கின்றன.

அபூர்வ மூலிகைகள் :

இங்கே கிடைக்கும் பல அற்புத மூலிகைகளில் முறிந்த எலும்பை கூடவைக்கும் மூலிகை இலை கூட இங்கே உள்ளது . முறிந்த எலும்புகளை ஒன்று கூட்டி, இந்த மூலிகை இலையை வைத்துக் கட்டினால் அதிசயத்தக்க வகையில் எலும்பு கூடும்.

பூமியில் எங்கும் காணக் கிடைக்காத ஜோதி விருட்சமும், சாயா விருட்சம் போன்ற அதி அற்புதமான மரங்கள், மூலிகைகள், இலைகள் இம்மலையில் மேல் உள்ளன. இறவாமை அளிக்கக்கூடிய கருநெல்லி போன்ற அரிய கனிவகைகள் இருக்கின்றன.

தவிர கோரக்க முனிவரால் 'உதகம்' என்று குறிப்பிடப்படும் உதகநீர் சுனையும் உண்டு. மருத்துவ குனம் கொண்ட மரம், செடிகொடிகளின் மேல் பட்டு இறங்கி வரும் தண்ணீர் தேங்கியசுனைகள் இருக்கிறது.

இந்தச் சுனையில் உள்ள நீருக்குத் தான் 'உதகம்' என்று பெயர். பார்ப்பதற்கு குழம்பிய சேற்று நீர்போல் காணப்படும். இந்த உதகநீர் மருத்துவ குணங்களைக் கொண்டது. இதுபோன்ற நீரை நாம் பருகிவிட முடியாது.

விபரங்கள் அறிந்தவர்க்ளின் மூலமும், துணையோடு அந்நீரை மருந்தாக
பயன்படுத்த வேண்டும்.

சதுரகிரி மலையில் தபசு குகைக்கு அருகில் கற்கண்டு மலைக்குக்கீழ் அடிவாரத்தில் சுணங்க விருட்சம் என்னும் மரம் உள்ளது.

இந்த மரத்தின் காய் நாய்க்குட்டி போலிருக்கும். அந்தக் காய் கனிந்து விழும்போது நாய்க்குட்டி குரைப்பதைப் போல் இருக்கும். விழுந்த கனி 10 வினாடிக்குப் பிறகுமறுபடியும் அம்மரத்திலேயே போய் ஒட்டிக்கொள்ளும்.

அதேபோல் 'ஏர் அழிஞ்ச மரம்' என்றொரு மரம் உண்டு.

இந்த மரத்தில் காய்க்கும் காய் முற்றியவுடன் கீழே விழுந்து விடும். விழுந்த காய் காய்ந்து அதன் தோல் உரிந்தவுடன் மீண்டும் மரத்தில் போய் ஒட்டிக்கொள்ளும். இடையில் மழை, காற்றினால் மரத்தை விட்டு தள்ளிப்போய் இருந்தாலும் மேல் தோல் உரிந்தவுடன் மீண்டும் மரத்தில்
வந்து ஒட்டிக்கொள்ளும்.

இந்த 'ஏர் அழிஞ்ச மரத்தின்' கொட்டைகளை எடுத்து எண்ணையில ஊறவைத்து அதன் மூலம் கிடைக்கும் மையை உபயோகித்து வசியம் செய்வது ஒரு வகை.

சதுரகிரியில் நந்தீஸ்வரர் வனத்தில் கனையெருமை விருட்சம் என்றொரு மரமுண்டு. அம்மரத்தினடியில் யாராவது ஆட்கள் போய் நின்றால் அம்மரம் எருமை போல் கனைக்கும். அம்மரத்தை வெட்டினால், குத்தினால் பால் வரும்.

இதேபோல் மற்றொரு விருட்சம் மரமும் உண்டு. இந்தவிருட்சம் நள்ளிரவில் கழுதைப் போல் கத்தும். வெட்டினால் பால் கொட்டும். நவபாஷண சேர்க்கையில் இந்த விருட்சக மரத்தின் பாலும் முக்கியமான சேர்க்கையாகும்.


இவை எல்லாவற்றையும் விட தூக்கி சாப்பிடும் விஷயம் ஒன்று உள்ளது. மலையில் மிக அடர்ந்த பகுதியில் - " மதி மயக்கி வனம்" என்ற பகுதி உள்ளது. இங்கே உள்ளே சென்றவர்கள் , மதியை மயக்கி அவர்கள் வெளியே வரவே முடியாது என்று கூறுகின்றனர். நான் கேள்விப்பட்ட வரை , எங்கள் அருகில் இருக்கும் கிராமத்துக் காரர் ஒருவர் வழி தவறி உள்ளே சென்று மாட்டிக்கொண்டு விட்டார். "மகாலிங்கம் காப்பாத்து, காப்பாத்து" என்று மூன்று நாட்கள் கதறி, ஒரு வழியாக அந்த வனத்திலிருந்து வெளியே வந்து விட்டார். அடர்ந்த காடு, நிறைய பூச்செடிகள் இருந்தது. எதுவும் கோவில் கூட இல்லை. ஆட்களே யாரும் இல்லை. பசியே தெரியவில்லை. வெளியே வந்தது ஆண்டவன் அருள் என்று, இன்றும் அவர் திரும்ப திரும்ப புலம்பிக் கொண்டே இருக்கிறார்.


இன்றும் அமாவாசை, பௌர்ணமி தினங்களில் - சித்தர்கள், ரிஷிகள் - மகாலிங்க பூஜை செய்ய வருகின்றனர். கூட்டம் கூட்டமாக நட்சத்திரங்கள் மலைப்பகுதிகளில் விழுகின்றன. வீடியோ காமிராக்களில் அதை நிறைய பகதர்கள் பதிவு செய்து இருக்கின்றனர். ஏற்கனவே நாம் " கட்டை விரல் அளவில் காட்சி தந்த சித்தர் பற்றிய பதிவை வாசகர்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளோம். இவை அத்தனையும் சர்வ நிஜம். இறை நம்பிக்கை உள்ள பக்தர்கள் , வாழ்வில் ஒரு முறையேனும் இந்த மகாலிங்கத்தையும் , சந்தன மகா லிங்கத்தையும் - மனமுருக பூஜித்து வழிபட்டு வாருங்கள். நீங்கள் நினைத்ததை சாதிக்கும் வல்லமையை அந்த சிவம் உங்களுக்கு அளிக்கும்.


உங்கள் தேடல் , பக்தி உண்மை எனில் - நீங்கள் மனதார நினைத்து வழிபாடு செய்யும் சித்தர் தரிசனம் உங்களுக்கு சதுரகிரியில் நிச்சயம் கைகூடும். இதை நிறைய பக்தர்கள் அனுபவித்து இருப்பதால் , இப்போதெல்லாம் சதுரகிரியில் கூடும் கூட்டத்திற்கு குறைவில்லை..



முதன்முறை செல்பவர்கள் - கூட்டம் அதிகமாக இருக்கும் தினங்களை தவிர்த்து சாதாரண சனி , ஞாயிறு கிழமைகளில் செல்வது உங்களுக்கு நல்லதொரு அனுபவம் கிடைக்கும்.


Thursday, 27 October 2011

அகத்தியரின் மகிமைகள்:

அகத்தியர் தோற்றம் பற்றி பல விதமாகக் கூறப்படுகிறது. தாரகன் முதலிய அரக்கர்கள் உலகை வருத்த, அவர்களை அழிக்க இந்திரன், வாயு, அக்கினி ஆகியோர் பூமிக்கு வந்தனர். இவர்களைக் கண்ட அசுரர்கள் கடலுக்குள் ஒளிந்தார்கள். இந்திரனின் யோசனைப்படி அக்கினி வாயுவுடன் கூடி பூமியில் விழுந்து மிர்திரர் குடத்திலிட்ட வீரியத்திலிருந்து அகத்தியராய் அவதரித்தார் என்றும், வருணன் தண்ணீரிலிட்ட வீரியத்திலிருந்து வசிஷ்டரும்... அவதரித்தனர் என்றும், குடத்திலிருந்து தோன்றியமையால் அகத்தியர் குடமுனி, கும்பயோகி என்னும் பெயர்களைப் பெற்றார் என்றும் கருத்துகள் நிலவுகின்றன.

முன்பு தேவர்களை வருத்திய அசுரர் இப்போதும் வருத்த ஆரம்பித்தனர். இந்திரன் அவர்களை அழிக்க வரும்போது அசுரர்கள் கடலுக்குள் ஒளிந்து கொண்டனர். தேவேந்திரன் வேண்டுகோளுக்கிணங்க அகத்தியர் சமுத்திர நீர் முழுவதையும் குடித்து விட, இந்திரன் அசுரர்களை அழித்தார். அதன்பின் நீரை மீண்டும் கடலுள் விடுவித்தார் அகத்தியர்.

அகத்தியர் நீரின் மேல் படுத்தபடியே பன்னிரெண்டாண்டுகள் கடுந்தவமியற்றி அரிய சக்திகளை பெற்றார். கயிலையில் நடந்த சிவபெருமான் திருமணத்தின் போது வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது. அதனால் அகத்தியரை தென் திசைக்கு செல்லுமாறு சிவபெருமான் கட்டளையிட்டார்.


மேருமலைக்கு செல்ல வழிவிடாமல் நின்ற விந்தியமலை, அகத்தியரைக் கண்டதும் பணிந்து தாழ்ந்து நின்றது. தான் தென் திசை சென்று வரும் வரையில் பணிந்து இருப்பாயாக என்று கூறிச் சென்ற அகத்தியர் மீண்டும் வடதிசை செல்லாததால் விந்திய மலையும் உயரவில்லை.

இராமபிரானுக்கு சிவகீதையை போதித்துள்ளார் அகத்தியர்.



சுவேதன் என்பவன் பிணந்தின்னுமாறு பெற்றிருந்த சாபத்தை போக்கினார். தமக்கு வழிபாடு செய்யாது யோகத்தில் அமர்ந்திருந்த இந்திரத்துய்மன் என்பவனை யானையாகுமாறு சபித்தார்.

அகத்தியர் தம் முன்னோர்களுக்காக விதர்ப்ப நாட்டை அடைந்து அவ்வரசன் மகள் உலோபமுத்திரையை மணந்து தென்புலத்தார் கடனை தீர்த்தார்.

தென் திசைக்கு வந்த அகத்தியர் பொதிகை மலையில் தங்கி முருகக் கடவுளின் ஆணைப்படி “அகத்தியம்” என்னும் நூலை இயற்றினார்.

அகத்தியர் இந்திரன் சபைக்கு சென்றபோது இந்திரன் ஊர்வசியை நடனமாட செய்தான். ஊர்வசி இந்திரன் மகன் சயந்தனிடம் கொண்ட காதலால் தன்னிலை மறந்தாள். அதனால் அகத்தியர் சயந்தனையும் ஊர்வசியையும் பூமியில் பிறக்கும்படி சபித்தார்.

வாதாபி, வில்வளவன் என்னும் அரக்கர் இருவரில் வில்வளவன் வேதியர் உருக்கொண்டு வழியில் செல்லும் வேதியர், முனிவர் முதலானோரை விருந்திற்கு அழைத்து வாதாபியைக் கறி சமைத்து படைத்து வாதாபியை திரும்ப அழைக்க; அவன் அவர்கள் வயிற்றைக் கிழித்து வெளியே வருவதால் அவர்கள் இறந்து போவார்கள். முனிவர் இதனை அகத்தியரிடம் முறையிட்டனர். அகத்தியர் அவர்களிடம் விருந்து உண்ண சென்றார். வில்வளவன் உணவு படைத்துவிட்டு அகத்தியர் வயிற்றிலிருக்கும் வாதாபியை கூப்பிட அகத்தியர் “வாதாபே ஜீர்ணோ பவ” என்று வயிற்றைத் தடவ வாதாபி இறந்தான். நிலமையை அறிந்த வில்வளவன் அகத்தியரிடம் மன்னிப்பு கோரினான்.

சிவ பூசை செய்வதற்காக கமண்டலத்தில் அகத்தியர் கொண்டு வந்த கங்கை நீரை விநாயகர் ‘காக உரு’ கொண்டு சாய்த்துவிட கமண்டலத்திலிருந்து வழிந்து ஓடிய நீரே காவிரி ஆறு ஆனது.

இலங்கை மன்னர் இராவணனை தம் இசை திறத்தால் வென்றார் அகத்தியர்.
தூங்கெயிலெறிந்த தொடித்தோட் செம்பியன் காலத்தில் காவிரி பூம்பட்டிணத்தில் இந்திர விழாவை எடுப்பித்தார்.

புதுச்சேரிக்கு அருகிலுள்ள ‘உழவர் கரை’யில் ஆசிரமம் அமைத்து வேதபுரி பல்கலைக் கழகத்தில் தமிழை போதித்தார். எனவே அவர் தங்கியிருந்த பகுதி ‘அகத்தீஸ்வரம்’ என்று அழைக்கப்பட்டு அங்கு பெரிய சிவாலயம் கட்டப்பட்டது. அதனை அகத்தீஸ்வரமுடையார் ஆலயம் என்றும் கூறுகின்றனர்.
சித்தராய் விளங்கிய அகத்தியரை பற்றிய அகத்தியர் காவியம் பன்னிரெண்டாயிரம் வாயிலாக சில கருத்துக்களை மட்டுமே தெரிந்து கொள்ள முடிகிறது.

அகத்தியர் அனந்தசயனம் என்ற திருவனந்தபுரத்தில் சமாதியடைந்ததாகக் கூறப்படுகிறது. ஒரு சிலர் அவர் கும்பகோணத்தில் உள்ள கும்பேசுவரர் கோவிலில் சமாதி கொண்டிருப்பதாகக் கூறுகின்றனர்.

அகத்தியர் தென்நாடு வந்த வரலாற்றை ஆய்வியல் நோக்கில் திரு.N. கந்தசாமி பிள்ளையின் சித்த மருத்துவ வரலாறு நூலில் காணலாம்.
அகத்திய மாமுனி சித்த வைத்தியத்திற்கு செய்த பணி அளவிடற்கரியது. பல நோய்களுக்கும் மருத்துவ சந்தேகங்களுக்கும் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளார்.

அகத்தியர் பெயரில் வெளியாகியுள்ள சமரச நிலை ஞானம் என்னும் நூலில் உடம்பில் உள்ள முக்கியமான நரம்பு முடிச்சுகள் பற்றிய விளக்கம் காணப்படுகிறது. அகத்தியர் ஐந்து சாஸ்திரங்கள் என்னும் நூலில், பதினெட்டு வகையான மனநோய் பற்றியும் அதற்குரிய மருத்துவம் பற்றியும் விளக்கப்பட்டிருக்கின்றன.


அகத்தியர் அஷ்ட மாசத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் தோஷங்கள் பற்றி கூறியுள்ளார். மேலும் அவர் எழுதிய நூல்களில் கிடைத்தவை:

1. அகத்தியர் வெண்பா
2. அகத்தியர் வைத்தியக் கொம்மி
3. அகத்தியர் வைத்திய ரத்னாகரம்
4. அகத்தியர் வைத்தியக் கண்ணாடி
5. அகத்தியர் வைத்தியம் 1500
6. அகத்தியர் வைத்திய சிந்தாமணி
7. அகத்தியர் கர்ப்பசூத்திரம்
8. அகத்தியர் ஆயுள் வேத பாஷ்யம்
9. அகத்தியர் வைத்தியம் 4600
10. அகத்தியர் செந்தூரம் 300
11. அகத்தியர் மணி 4000
12. அகத்தியர் வைத்திய நூல் பெருந்திரட்டு
13. அகத்தியர் பஸ்மம் 200
14. அகத்தியர் நாடி சாஸ்திரம்
15. அகத்தியர் பக்ஷணி
16. அகத்தியர் கரிசில் பஸ்யம் 200
17. சிவசாலம்
18. சக்தி சாலம்
19. சண்முக சாலம்
20. ஆறெழுத்தந்தாதி
21. காம வியாபகம்
22. விதி நூண் மூவகை காண்டம்
23. அகத்தியர் பூசாவிதி
24. அகத்தியர் சூத்திரம் 30
25. அகத்திய ஞானம் என்னும் அகத்தியம் என்னும் ஐந்திலக்கணம்

26. அகத்திய சம்ஹிதை என்னும் வடமொழி வைத்திய நூலும் இவரால் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அகத்தியர் பெருமானின் பூசை முறைகள்:

தேகசுத்தியுடன் அழகிய சிறு பலகையில் மஞ்சள் இட்டு மெழுகி, பக்தியுடன் கோலமிட்டு, அம்மஞ்சள் பலகையின் மேல் சுவாமிகளின் படத்தை வைத்து, அதற்கு முன்பு மஞ்சள், குங்கும திலகமிட்டு அலங்கரிக்கப்பட்ட குத்துவிளக்கில் இரு முக தீபம் ஏற்றி வைக்க வேண்டும். படத்தின் முன்பாக பித்தளை அல்லது செம்பு அல்லது வெள்ளியினால் செய்யப்பட்ட உருண்டையான செம்பில் சுத்தமான தண்ணீரை நிரப்பி வைக்க வேண்டும்.

பின் சித்தரின் தியானச் செய்யுளை கண்மூடி மனதார கூறி பிறகு பின்வரும் பதினாறு போற்றிகளை சொல்லி வில்வம், துளசி, கதிர்பச்சை, விபூதி பச்சை போன்ற பச்சிலைகளைக் கொண்டு அர்ச்சிக்க வேண்டும்.

பதினாறு போற்றிகள்:


1. தேவாதி தேவர்களைக் காத்தவரே போற்றி!
2. சிவசக்தி திருமண தரிசனம் கண்டவரே போற்றி!
3. தென் திசை, வடதிசையைச் சமப்படுத்தியவரே போற்றி!
4. விந்திய மலையின் அகந்தையை போக்கியவரே போற்றி!
5. கும்பத்திலுதித்தக் குறு முனியே போற்றி!
6. சித்த வைத்திய சிகரமே போற்றி!
7. சுவேதனின் சாபம் தீர்த்தவரே போற்றி!
8. இசைஞான ஜோதியே போற்றி!
9. உலோப முத்திரையின் பதியே போற்றி!
10. காவேரி தந்த கருணையே போற்றி!
11. அகத்தியம் தந்த அருளே போற்றி!
12. இராமபிரானுக்கு சிவ கீதையருளியவரே போற்றி!
13. அசுராசுரர்களை அழித்தவரே போற்றி!
14. அரும் மருந்துகளை அறிந்தவரே போற்றி!
15. இசையால் இராவணனை வென்றவரே போற்றி!
16. இன்னல்கள் போற்றி இன்பம் தரும் அகத்திய பெருமானே போற்றி! போற்றி!

நிவேதனம்:

பஞ்சாமிர்தம், பழங்கள், சக்கரைப்பொங்கல், இளநீர் போன்றவற்றுடன் இளம் பச்சை நிற வஸ்திரம் அணிவித்து புதன்கிழமை பூசை செய்யவும். நிறைவாக “ஓம் ஸ்ரீம் அகத்திய முனிவரே போற்றி!” என்று 108 முறை சொல்லி ஆராதனை செய்ய வேண்டும்.

அகத்திய முனிவரின் பூசா பலன்கள்:

1. இசையிலும் கவிதையிலும் மேன்மையுண்டாகும்.
2. கல்வித்தடை நீங்கும்.
3. புதன் பகவானால் உண்டான தோஷம் நீங்கும்.
4. முன்வினை பாவங்கள் அகலும்.
5. பித்ருசாபம் நீங்கி அவர்களின் ஆசி கிடைக்கும்.
6. பேரும், புகழும், மதிப்பும் தேடி வரும்.
7. பூர்விக சொத்துக்கள் கிடைக்கும்.
8. சகலவிதமான நோய்களும் தீரும்.
9. குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும்.

நன்றி : அகஸ்திய விஜயம் 

சிறுநீரக கற்கள்

சதுரகிரியில் அன்னதானம் செய்து கொண்டுவரும் 72வயது முதிர்ந்த ஸ்ரீசிவசங்கு ஐயா அவர்கள், அவருக்கு சதுரகிரியில் ஒரு சித்தர் கற்றுக்கொடுத்த மருந்தினை இன்றளவும் இலவசமாக கொடுத்து உதவுகிறார். மூன்றே மாத்திரையில் 8மி.மீ அளவுள்ள சிறுநீரக கற்கள், சென்னையில் உள்ள ஒரு மருத்துவருக்கு வெளியில் வந்தது உண்மை. வேண்டுவோர் கண்டிப்பாக தொடர்பு கொள்ளலாம்.

Thursday, 29 September 2011

முதல் நாடி

சென்ற இதழில் நாடி காண்பதற்க்குகூட அவர்கள் அருள் வேண்டுமென்று கூறியிருந்ததுபோல், சிவரூபமான சித்தராகிய ஸ்ரீஅகஸ்த்திய மஹாரிஷியின் நாடி முதன்முதலில் எனக்கு சென்னை, சாலிகிராமத்தில் திரு.கலியமூர்த்தி அவர்களின் தவப்புதல்வன் திரு.பாலரிஷி (எ) பாலமுருகன் வாயிலாக 05/04/2000 அன்று கிடைத்தது என் வாழ்நாளில் மறக்கமுடியாத ஒன்று.

பொதுகாண்டம் - ஹரிஹரன் - 05/04/2000.

(நல்ல பெற்றோர்க்கு இடைமகனாய் பிறந்து, இதை காணுகின்ற வேளையில் அன்னை மட்டும் தீர்க்கமாக உள்ளார். கூடப்பிறந்தவர்கள் ஐந்து ஆண்மகன்களும், மூன்று பெண்களுமாக இருந்து, அதில் நான்கு சகோதர்களுக்கும் மூன்று சகோதரிகளுக்கும் திருமணமாகிவிட்டது. இதை காணும் பொழுது, எனக்கு திருமணமாகி ஆண்குழந்தை ஒன்று உண்டென்றும், அரசாங்கத்தில், இரயில்வே துறையில், எழுத்து மார்க்கமான பணிபுரியும் என் பெயர் ஹரிஹரனும், அம்மாவின் பெயர் இலட்சுமி, தந்தை கிருஷ்ணமூர்த்தி மற்றும் மனைவி ஸ்ரீஉமா என்றும் அற்புதமாக கூறி, இதை நான் எனது முப்பத்திமூன்றாவது வயதில் காணவேண்டுமென்பது விதியென்றார்.)
... யோகமுள பெருநகர சார்ந்த இன்பம்
ஈடில்லா வளர்ச்சியதும் பெண்சேய்தோன்றும்...


(பெருநகரத்தில் (சென்னை) வசிப்பேனென்றும், பெண்குழந்தை உண்டுமென்றார் - அவரது கூற்றுப்படி எங்களுக்கு 2001ம் வருடம் பெண்குழந்தை பிறந்தது)

... உயர் இல்லாள் எழுபானீர் மூன்றும்ஐந்தில்
தப்பில்லா இல்லவளும் முன்னேமோட்சம்....

(எனது மனைவி எழுபத்து மூன்று வயது காலம் வரை சிறப்பாக வாழ்ந்து, எனக்கு முன்னே மோட்சம் பெறுவாள் என்று கூறியுள்ளார்)

ஹரிஹரன் - 14/10/2002

... அஞ்சிவரும் ஈராண்டின் முன்புதானே
அரும்பாடு ருணத்தோடு கணிணிகல்வி
கல்விகற்று சிங்கமுக தேசம்சென்று
கண்டமதில் தப்பித்து இவனின் இல்லாள்
நல்தவத்தின் அருளாலே ருணத்தைதந்து ....

(கடந்த 2000 வருடம் கட்டிடவியல் பொறியாளரான நான், ஜாவா கணினி கல்வி பயின்று, சிங்கப்பூர் சென்று, அமெரிக்காவின் இரட்டை கோபுரம் தகர்த்த நேரத்தில், கணிணிதுறை சரிந்த நிலையில் சுமார் ஒரு இலட்சம் செலவுடன் இந்தியா திரும்ப நேர்ந்ததை குருமுனி அவர்கள் நல்தவத்தின் அருளால், மனைவிக்கு வரவேண்டிய கண்டத்தை தவிர்ப்பதற்காக ருணத்தை (கடனை)கொடுத்தோம் என்றார்.. என்னே அவரின் கருணை...)


... மேறுவுடன் பிலவங்க ஆனித்திங்கள்
 மால்வாரம் இருபானெட் பூரம்சார்மீன் ....

(எனது வலதுகை பெருவிரல் அடையாளத்தின் மூலம் பல நாடி கட்டுகளை தேடியபின் கிடைத்த எனது நாடிகளிருந்து வந்த வரிகளின் விளக்கமானது - நான் பிறந்தது பிலவங்க வருடம் ஆனி மாதம் 28ம் நாள் பூரம் நஷத்திரம் என்பதனை நான் கூறாமலேயே எனக்குக் கூறியது என்னை ஆச்சரியபட வைத்தது.)

... வண்ணமதாய் நல் ஈன்றோர்க்கு இடையின்சாயல்
வளமான அன்னைமட்டும் தீர்க்கம்இந்நாள்

தீர்க்கமுள ஆண்பஞ்சம் சூலம்பெண்ணும்
திருமணமும் வேதமது பெண்ணும்கண்டு
பார்க்கவரும் மகன்மன்றல் ஆண்சேய்ஒன்று
பாலகனும் இறைதொண்டு எழுத்துப்பார்வை
பார்வையுடன் தொடர்ந்தோடும் வாகனத்தில்
பணிசிறப்பு சுயதேட்டு சிந்தைகூட
தீர்வாகும் ஹரிஹரனே மகனின் நாமம்
தெரியத்தாய் இலக்குமியும் அம்மாளாக
ஆகத்தன் வெண்ணையுண்ட மூர்த்தியாக
அழகு இல்லாள் திருமுன்சொல் உமாவின் நாமம்
சோகமிலா நூல்நோக்கம் முப்பான்மூன்றில்......

Tuesday, 27 September 2011

நாடி



தெந்திசை உயர்ந்ததென்று
தாழவைக்கத் தானமர்ந்து
சிவய நமசிவ வென்று
பொதிகை மலையிருந்து-பரம்
பொருளின் பூரணத்தை
பாடலுக்குள் உணர்த்தி
வைத்த குறுமுனியே
அகத்தியனே!
உமைக் குருவெனவே
தாழ்பணிந்து தொழுகின்றேன்! 
உடனிருந் தருளிடுவாய்!

"ஐயனை நாடி"...... 
 (சிவகிரியாம் சதுரகிரியின் ஆனந்த அனுபவத்தோடு .... ஞானத்தைத் தேடிய ஆத்மாவின் உள்ளத்தின் வார்த்தைகளை.. மஹாளயபக்ஷ அமாவாஸையில் எழுததூண்டிய குருவிற்கு முதல் வணக்கம்)

முன்னுரை:
 "அரிது, அரிது மானிடராய் பிறத்தலரிது - மானிடரின் கூன், குருடு, செவிடு நீங்கி பிறத்தல் அதனின் அறிது - என்ற வரிகளுக்கேற்ப - இப்பூவுலகில் என்னை மானிடனாக வடிவமைத்த இறைசக்திக்கு முதல் வணக்கம்.  ஐயனை நாடி என்கிற தலைப்பில் என்னை எழுத வைத்த, சிந்தையில் குடிகொண்டு நல்லோர்களை நல்வழிபடுத்திக் கொண்டிருக்கும் தலையாய சித்தரும் - சிவரூபமான ஸ்ரீ லோபாமுத்ர ஸஹித ஸ்ரீ அகஸ்தியமஹா ரிஷிக்கு சிரம் தாழ்ந்த பல கோடி வணக்கங்கள்.  இந்நூலை, எனை பத்துத் திங்கள் சுமந்து, தான் சேர்த்த புண்ணியங்களை எனக்காக அர்ப்பணித்த - "தாயிற் சிறந்த கோயிலுமில்லை" என்ற வரிகளின் அர்த்தத்தை எனக்கு உணர வைத்த நடமாடும் தெய்வமாகிய - எனது தாய்க்கும், வேதகிரி என்கிற சதுரகிரியில் மகாலிங்கசுவாமியின் முழு ஆசி பெற்ற - ஈசசங்கோன் என்று குருமுனியால் அழைக்கபெற்று, இன்றளவும் குருமுனியின் ஆசியோடு என்னை நல்வழிபடுத்திக் கொண்டிருக்கும் அன்னதான சித்தராகிய ஸ்ரீசிவசங்கு ஐயாவிற்கும் நன்றியுடன் காணிக்கையாக்குகிறேன். 

ஸ்ரீ அகஸ்த்தியர் காயத்ரி
"ஓம் அகஸ்த்தீஸ்வராய வித்மஹே
பொதிகை ஸஞ்சாராய தீமஹி
தந்நோ ஞானகுரு ப்ரஸோதயாத்!"

ஸ்ரீ ஈசசங்கோன் காயத்ரி
"ஓம் அன்னதாதாய வித்மஹே
பரப்ரஹ்மனேய தீமஹி
தந்நோ ஈசசங்கோன் ப்ரஸோதயாத்!"

குறிப்பு: இந்நூல் சுயசரிதையோ அல்லது விளம்பரமோ அல்ல. மாறாக, கதைகள் மூலம் நாம் அறிந்ததைக் காட்டிலும், நேரில் நடந்தவற்றை, ஆதாரத்துடன் விளக்குவது, தேடுதலை உணரமுடியும் என்பதற்காகவே! இது பக்குவபட்டு ஞானத்தைத் தேடுகின்ற ஆத்மாக்களுக்கு சொந்தமானதாகும். இந்நூல் நாடி ஜோதிடத்தின் மூலம் குருமுனி எனக்கு கூறிய எதிர்கால பலன்களும், அதன்மூலம்  நான் அனுபவித்த ஆனந்தமும் அடங்கும்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்ர ஸஹித ஸ்ரீ அகத்தீஸ்வராய நம:
(நாடி ஜோதிடம் - 22/03/2011 அன்று மாலை 8:30 மணியளவில் குருமுனி கூறிய வரிகளிருந்து....)
..... அன்னையருள் கொண்டமைந்தன் வாழ்விற்காக
அறிவிப்பேன் சூட்சமங்கள் அறியும்காலம்
இன்முகமாய் ஈசஹரியோன் உமையாளோடு
எடுத்துரைப்பேன் சாட்சியோடு எண்ணாவண்ணம்
வண்ணம்மேல் பலனுரைக்கும் காலம்தன்னில்
வழிபடுத்த மகன்செயலில் எமதுசிந்தை
வின்னமிலா இல்லவளின் ஆரோக்கியங்கள்
வளமோடு பிணிநீங்கி அருளைதந்தோம்
தந்ததோடு தன்வாழ்வு அனுபவத்தை
தனைஅறியா மாந்தர்க்கும் நன்குஉணர
சுந்தரமாய் வழிவகுத்தோம் ஞானசிந்தை
சூழ்ந்திடவே சதுரகிரி ஈசன் ஆசி

ஆசிதுணை  ஆளுகின்ற ப்ரத்தியங்கரே
அரவணைப்பாய் மிகைவெற்றி மகன்முயற்சி ....

(விளக்கம்: அன்னை பார்வதிதேவியின் அருளை கொண்ட மைந்தன், சூட்சமங்களை அறியும் காலம், தன் இல்லாள் உமாவோடு காணவந்துள்ளதை சாட்சியாக கூறி - காணுகின்ற வேளையில் மகன் மனதில் எமது சிந்தையை கொடுத்து, இல்லவளின் பிணியை(புற்றுநோய்) நீக்கி ஆரோக்கியங்களுடன் அருளை தந்தோமென்றார். மேலும் தன் வாழ்வு அனுபவத்தை, மாந்தர்கள் அறிந்து கொள்வதற்காக நூலாக மாற்றும் சிவஹரிஹரனுக்கு ஞானசிந்தையை கொடுத்து, சதுரகிரி ஈசனின் ஆசியும், இவ்வுலகை ஆளுகின்ற ப்ரத்தியங்கரா மாகாளியின் ஆசியும் உண்டென்று கூறினார். இந்நூலை எழுதுவதற்கு ஆசிகள் கொடுத்த, எல்லாம் வல்ல அவர்களின் திருவடிகளில் சமர்ப்பித்து, ஆனந்தத்துடன் சரணடைகிறேன். ) 

ஆன்மீகம்: உலகில் உள்ள ஒவ்வொரு ஜீவராசியையும் உள்ளடக்கியது பிரபஞ்ச சக்தி. பஞ்சபூதங்களும் அதனுள் அடக்கம். பஞ்சபூதங்கள் இல்லையேல் எந்த சஞ்சாரமுமில்லை. இதுவே உலக நியதி. ஆத்மா (எ) ஆன்மா என்பது பிரஞ்ச சக்தியால் படைக்கப்பட்டதாகும். அதற்கு உருவம் கிடையாது. எதனுள் இருக்கின்றதோ அதுவாகவே மாறிவிடும் ஆற்றல் பெற்றது. ஆன்மீகமென்பது சக்தியால் படைக்கபெற்ற ஒரு அருமருந்து. அதை சுவைக்கத் தெரிந்தால், ஆனந்தத்தை உணரலாம். மதத்தின் அடிப்படையில், பல பெயர்கள் பெற்றிருந்தாலும், குணத்தாலும் கொள்கையாலும் ஒன்றே.

இறைவன் நம்மை படைக்கும்பொழுது, நம் கர்மவினைகளிருந்து மீள்வதற்கு நல்பாதையை காட்டியுள்ளார். சித்தர்கள், ரிஷிகள் மற்றும் ஞானிகள் மூலமாக ந்மக்கு அதை உணர்த்திக் கொண்டிருக்கிறார். சித்தத்தை(மனதை) சித்தபட(ஒரு நிலைபடுத்துதல்) வைத்தால், சித்தத்தை(சித்தரை) உணரமுடியும்.

நாடி ஜோதிடம் என்பது, நம்மை நல்வழிபடுத்துவதற்காக பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே - சித்தர்களாலும், ரிஷிகளாலும் ஓலைக்சுவடியின் வாயிலாக எழுதி வைக்கப்பட்ட அற்புத மருந்து. பூர்வீகம் வைத்தீஸ்வரன்கோவிலாக இருந்தாலும், இன்று நாடெங்கும் கிளைகள் உள்ளன. அதை பார்ப்பதற்குகூட நமக்கு அவர்களின் அருள் இருந்தால்தான் கிடைக்குமென்பது முற்றிலும் உண்மை.


நன்றியுடன்,

(சிவஹரிஹரன்.)
ஆனந்தம் தொடரும் வரை சிறிது ஓய்வெடுக்கவும்......


Disclaimer & Privacy Policy


Some images contained in this blog have been obtained from the reference sites on the internet. If anyhow, by any of them is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.email us to sivahariharan2007@gmail.com